தமிழ்நாடு

டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் வழியில், கன்னத்தைக் கடித்து பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்!

நாகையில் பெண் காவலர் கன்னத்தைக் கடித்து பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் நடவடிக்கை, சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் வழியில், கன்னத்தைக் கடித்து பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யாக பணியாற்றி வந்த ராஜேஷ்தாஸ், முதல் அமைச்சர் பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என்றும், அதேவேளையில், புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியைத் தடுத்தார் என எஸ்.பி.யை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன் என எடப்பாடி அரசு மீது நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, டி.ஜி.பிக்கு உரியத் தண்டனை கொடுக்காத விளைவு, இதேபோன்று மற்றொரு சம்பவம் நாகையில் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் வழியில், கன்னத்தைக் கடித்து பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்!

இந்நிலையில், ஜான்சி நேற்று வேலையை முடித்து விட்டு, ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்போது, இதே குடியிருப்பில் வசித்துவரும், நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவக்குமார், திடீரென ஜான்சியை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், கீழே தள்ளி அவரின் கன்னத்தை கடித்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

பின்னர், சிவக்குமாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய ஜான்சி, நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசாரிடம் அழுது கொண்ட தெரிவித்துள்ளார். இதை கேள்விப்பட்டு சக போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார், காவலர் சிவக்குமாரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரைக் கைது செய்தனர்.

பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோதே டி.ஜி.பி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தண்டனை கொடுத்திருந்தால், நாகையில் ஆண் காவலர், சக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்க துனிந்திருப்பாரா?, தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாதபோது, சாதாரண பெண்களின் நிலையைப் பற்றி நாம் சொல்லவா வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories