தமிழ்நாடு

புயல் பாதிப்புகளை போட்டோவில் பார்த்துவிட்டுச் சென்ற மத்தியக் குழு.. குறைகளை கேட்காததால் மக்கள் வேதனை!

சென்னையில் மத்திய குழுவின் சார்பில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை கூறுவதற்கு நெருங்க விடவில்லை என்பதால் பொதுமக்கள் வேதனை.

புயல் பாதிப்புகளை போட்டோவில் பார்த்துவிட்டுச் சென்ற மத்தியக் குழு.. குறைகளை கேட்காததால் மக்கள் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் புகைப்படங்களை மட்டுமே பார்த்து ஆய்வு செய்துள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவர், புரேவி, போன்ற புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியிலிருந்து மத்திய குழு நேற்று சென்னை வந்தது.

இந்த நிலையில் மத்திய குழுவானது இரு பிரிவுகளாக பிரிந்து தென் சென்னை மற்றும் வட சென்னையில் புயலால் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய வந்தனர். இந்த குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் மனோகரன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் ரனஞ்ச்ஜெ சிங், மீன்வளத்துறை ஆணையர் பால் பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தென் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மத்திய குழுவானது முதலில் தென்சென்னை பகுதிக்குட்பட்ட வேளச்சேரி ராம்நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் மத்திய குழுவில் உள்ள அதிகாரிகள் வேளச்சேரியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தாமல் மாறாக மழை பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ராம் நகர் நுழைவாயிலில் கூடாரம் போல் அமைத்து புகைப்படங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். புகைப்படங்களை மட்டும் பார்த்துவிட்டு மக்களின் குறைகளையும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்யாமலேயே மத்திய குழு அடுத்த பகுதிக்கு சென்று விட்டது.

இதேபோல் பள்ளிக்கரணை பகுதிகளிலும் ஆய்வு செய்வதாகக் கூறி மக்களிடம் குறைகளை கேட்காமலேயே புகைப்படங்களை மட்டும் பார்த்துவிட்டு பாண்டிச்சேரிக்கு விரைந்தது மத்திய ஆய்வுக்குழு. அதுமட்டுமல்லாமல் மத்திய குழுவின் சார்பில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளை பொதுமக்கள் நெருங்கக் கூட விடாமல் போலிஸார் தடுத்ததாகவும் மாறாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை போலீசார் துரத்தி விட்டதாகவும் பொதுமக்கள் புகார் சாட்டுகின்றனர்.

இதில் குறிப்பாக தமிழக அரசு சார்பில் மழைநீர் வடிகால் நீர் போக்கு பாதை அமைக்கப்பட்ட பின்னரே இந்தப் பகுதியில் சிறு அளவு மழை பெய்தாலும் அதிக அளவில் நீர் தேங்கி சாலைகள் மற்றும் வீடுகளில் புகுந்து வருவதாகவும் அப்பகுதி வாசிகள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories