வைரல்

வெள்ள தடுப்பு சுவர் கட்ட 1 கோடி ஒதுக்கிய அரசு : 60 லட்சத்தை திருடி குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கட்கரி

அசாம் மாநிலத்தில் வெள்ளத் தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை நிதின் கட்காரி தனது குடும்ப சுற்றுலாவிற்கு செலவு செய்தாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெள்ள தடுப்பு சுவர் கட்ட 1 கோடி ஒதுக்கிய அரசு : 60 லட்சத்தை திருடி குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கட்கரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அசாம் மாநிலத்தில் தற்போது வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆற்றில் இருந்த தண்ணீர் மக்கள் பகுதியில் சூழ்ந்து பெரும் சேதம் அடைந்துள்ளது. சுமார் 90-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் மூழ்கி பலியாகிருப்பார்கள் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், காசிரங்கா தேசியப் பூங்கா நீரில் மூழ்கியது.

இந்த பூங்காவில் இருந்த காண்டாமிருகங்கள் மற்றும் யானைகள் உட்பட தற்போது வரை 20 விலங்குகள் மரணம் அடைந்துள்ளன. இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு காரணம் என்ன, தடுப்பு சுவர்கள் எங்கே என கேள்விகள் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையின் மூலம் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அதாவது, கடந்த 2017ம் ஆண்டே இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடாது என ரூ.1 கோடி நிதி பிரம்புத்திரா வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையைக் கொண்டு வெள்ளத் தடுப்பு கட்டுமானங்களை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா வாரியமும் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கு துவக்க நிகழ்ச்சியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

வெள்ள தடுப்பு சுவர் கட்ட 1 கோடி ஒதுக்கிய அரசு : 60 லட்சத்தை திருடி குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கட்கரி

இந்த துவக்க நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று அமைச்சர் என்கிற முறையில் நிதின் கட்கரி அதிகாரிகளுடன் தான் அங்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவுகளில் ஒன்றான மஜூலியில் நிகழ்ச்சியை நடத்தியதால் அரசு பணத்தில் சுற்றுலா செல்ல முடிவெடுத்து தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்தபிறகு திரும்பி வராமல், நான்கு நாட்கள் அங்கேயே சாவகாசமாக தங்கிருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அந்த நான்கு நாட்களுக்கு நிதின் கட்கரிக்கான தனி விமானம், அவர்கள் குடும்பத்திற்கான உணவு ஏற்பாடுகள் என மொத்தம் 62 லட்சத்து 96 ஆயிரத்து 652 ரூபாய் செலவாகி உள்ளது. இந்த பணத்தை பிரம்மபுத்திரா வாரியமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மபுத்திரா வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டதே 1 கோடி ரூபாய் தான். அதில் ரூ. 63 லட்சம் அமைச்சரின் சுற்றுலாவுக்கு செலவழிக்கப்பட்டது என்றால், மீதமிருக்கும் 27 லட்சம் ரூபாயை வைத்து தான் கட்டுமான பணிகள் மேற்கொள்ளவேண்டும் வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

வெள்ள தடுப்பு சுவர் கட்ட 1 கோடி ஒதுக்கிய அரசு : 60 லட்சத்தை திருடி குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கட்கரி

இதனால், 2 ஆண்டுகளாகியும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பகுதியில் வெள்ளத்தடுப்பு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமானால் அங்கு ஒரு செங்கல் கூட நடப்படவில்லை என்பது தான் உண்மை.

வெள்ளத்தடுப்பு கட்ட வெள்ளம் மற்றும் ஆற்றின் நில அரிப்பைத் தடுக்கும் கட்டுமானங்களை ஏற்படுத்துவது குறித்து சர்வே நடத்தப்பட்டதோடு, அனைத்தும் நின்று விட்டன. விளைவு, பிரம்மபுத்திரா வெள்ளத்திற்கு 90-க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடி செயலில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பிரம்மபுத்திரா வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சூழலியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories