தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் தொடரும் பாலியல் குற்றங்கள் : தூத்துக்குடி அருகே பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் தொடரும் பாலியல் குற்றங்கள் : தூத்துக்குடி அருகே பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சம்படி தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி செங்கமலம் (47). இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிலையில், செங்கமலம் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் கண்விழித்த அவரது மகன், வீட்டில் தன்னுடைய தாயாரைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தான். உடனே அவன் அருகில் உள்ள வீடுகளிலும், அக்கம்பத்திலும் செங்கமலத்தை தேடியுள்ளனர்.

சம்படி அருகேயுள்ள காட்டுப்பகுதியில் செங்கமலம் முகம் சிதைக்கப்பட்டு, உடலில் ஆடையின்றி கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஏரல் காவல் நிலைய போலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அ.தி.மு.க ஆட்சியில் தொடரும் பாலியல் குற்றங்கள் : தூத்துக்குடி அருகே பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

நேற்று முன்தினம் நள்ளிரவில் செங்கமலத்தின் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், செங்கமலத்தை பாலியல் வல்லுறவு செய்து அவரது தலையில் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என்றும், பின்னர் அவரது உடலை இழுத்து சென்று, புதரில் வீசி விட்டுத் தப்பி இருக்கலாம் என்று போலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி, எஸ்.ஐ முருகப்பெருமாள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories