தமிழ்நாடு

“எதிர்காலக் கனவுகள் நிறைவேறட்டும்” - ப்ளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ - மாணவிகள் எழுதும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு இன்று முதல் துவங்குகிறது.

2019-20-ம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வு முறைகேட்டை தடுக்க, மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக பள்ளி கல்வி தேர்வு துறை தெரிவித்துள்ளது. +2 தேர்வு முடிவு, மே 14ந் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகம், புதுவையில் இன்று முதல் +2 தேர்வு எழுதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

வாழ்வில் அடுத்தகட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்காலக் கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories