தமிழ்நாடு

“கலைஞரின் வழிதொட்டுச் செயல்படும் தலைவர் மு.க.ஸ்டாலின்” : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை ரியா

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் ரியா என்ற திருங்கை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

“கலைஞரின் வழிதொட்டுச் செயல்படும் தலைவர் மு.க.ஸ்டாலின்” : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை ரியா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மாற்றுப்பாலினத்தவர்கள் பல்வேறு இழிவான பெயர்களால் அழைக்கப்பட்டுவந்த நிலையில் 2006ல் அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், ‘திருநங்கை’, ‘திருநம்பி’ எனப் பெயரிட்டு அழைக்கப்படவேண்டும் என சட்டம் இயற்றினார்.

கலைஞர் அவர்களால் 2008ம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்ட ஏப்ரல் 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ‘திருநங்கைகள் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இப்படி, திருநங்கைகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியது தி.மு.க ஆட்சி.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, தி.மு.க சார்பில் ரியா என்ற திருங்கை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

“கலைஞரின் வழிதொட்டுச் செயல்படும் தலைவர் மு.க.ஸ்டாலின்” : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை ரியா

கருவேப்பம்பட்டி ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தி.மு.க மாவட்ட கழகத்தால் திருநங்கை ரியா தேர்வு செய்யப்பட்ட நிலையில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பரமசிவனிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பேசியுள்ள திருநங்கை ரியா, தன்னை ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்வு செய்ததற்காக தி.மு.க-வுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் திருநங்கை/திருநம்பிகளுக்கு பல்வேறு அங்கீகாரங்களை அளித்தார். அவரது வழிதொட்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருநங்கையான எனக்கு சீட் கொடுத்துள்ளார். நான் வெற்றி பெற்றால், எந்தப் பாகுபாடுமின்றி வார்டு மக்களுக்காக பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories