தமிழ்நாடு

பி.எட்.,  தேர்வு தேதி மாற்றம்! - உயர்கல்வித்துறை அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வோடு  சேர்ந்து பி.எட். படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வு ஜூன் 8ம் தேதி  நடைபெற இருந்ததால் தற்போது பி.எட். தேர்வு தேதியை மாற்றியுள்ளது உயர்கல்வித்துறை.

பி.எட்.,  தேர்வு தேதி மாற்றம்! - உயர்கல்வித்துறை அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜூன் 8ம் தேதி நடைபெற இருந்த பி.எட். இறுதி ஆண்டுக்கான தேர்வு ஜூன் 13ம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட். படிப்புக்கான தேர்வும் ஒரே நாளில் ஜூன் 8ம் தேதி நடைபெற இருப்பதாக முன்னதாக அறிவித்ததால் மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனையடுத்து, ஒரே நாளில் டெட் மற்றும் பி.எட். தேர்வுகளை நடத்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பி.எட். இறுதி ஆண்டுக்கான தேர்வை ஜூன் 8ம் தேதியில் இருந்து 13ம் தேதிக்கு மாற்றியுள்ளது உயர்கல்வித்துறை.

banner

Related Stories

Related Stories