பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இல்லாத அளவு இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல் தமிழ்நாட்டு வீரர்கள் துளசிமதி,நித்யஸ்ரீ சிவன், மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் வென்கலப் பதக்கம் வென்று அசத்தினர். மேலும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 7 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
அதுமட்டுமல்லாது 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்ததம் 29 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 2020 ஆண்டு 19 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் முறியடித்து இருக்கிறார்கள்.
மேலும் பாரா ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் வீரர் என்ற பெருமையை அவனி லெகாரா பெற்றுள்ளார். இந்திய அரசு பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு இன்னும் கூடுதல் ஊக்கம் கொடுத்தால் அவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பதை இந்த பாரீஸ் பாரா ஒலிம்பிக் உறுதி செய்துள்ளது.