தமிழ்நாடு

“நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வர்ற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது CM Sir” : உதயநிதி கண்டனம்!

சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?

“நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வர்ற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது CM Sir” : உதயநிதி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து வெளியாகும் செய்திகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பாதி உடல் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டி.எஸ்.பி மற்றும் வடலூர் காவல்துறையினர், பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.

இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது. இந்த Sofa Model அரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.

தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு. பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.

நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க. சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?

நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir." என தெரிவித்துள்ளார்

banner

Related Stories

Related Stories