விளையாட்டு

"இந்த இந்திய வீரர் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தப் போகிறார்"- இளம்வீரரை புகழ்ந்த மாத்யூ ஹைடன்!

சுப்மன் கில் உலகில் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தும் வீரர் என ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் மாத்யூ ஹைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

"இந்த இந்திய வீரர் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தப் போகிறார்"- இளம்வீரரை புகழ்ந்த மாத்யூ ஹைடன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2018-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உற்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்ற சுப்மன் கில் உலகளவில் கவனத்தை ஈர்த்தார். அதன்பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் தடம்பதித்த சுப்மன் கில் தற்போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராகப் பார்க்கப்படுகிறார்.

அதிலும் இந்த ஆண்டு கில்லுக்கு அமோகமாக அமைந்துள்ளது. ஜனவரியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய கில் 3-ம் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார். தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் விளாசி அதிரவைத்தார்.

"இந்த இந்திய வீரர் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தப் போகிறார்"- இளம்வீரரை புகழ்ந்த மாத்யூ ஹைடன்!

அதன்பின்னர் தனது அதே பார்மை தற்போது ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து வருகிறார். இதுவரை குஜராத் அணி ஆடியுள்ள 4 போட்டியில் 63, 14, 39, 67 ரன்கள் குவித்து சீரான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார். அதிலும் பஞ்சாப் அணிக்கு எதிராக 49 பந்தில் 67 ரன் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில், சுப்மன் கில் உலகில் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தும் வீரர் என ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் மாத்யூ ஹைடன் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் " பஞ்சாப் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் சேசிங்கில் வெற்றி பெறுவதற்கு யாராவது ஒருவர் பொறுப்புடன் கடைசி வரை போட்டியை எடுத்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏனெனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு அட்டாக் மிகவும் தரமாக இருந்தது.

"இந்த இந்திய வீரர் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தப் போகிறார்"- இளம்வீரரை புகழ்ந்த மாத்யூ ஹைடன்!

அந்த தருணத்தில் அந்த வேலையை சுப்மன் கில் கச்சிதமாக செய்தார். அவர் விளையாடிய சில ஷாட்டுகள் கண்களுக்கு மிகவும் விருந்தாக அமைந்தன. மிகவும் கிளாஸ் நிறைந்த வீரராக செயல்பட்டு வரும் அவர் நிச்சயமாக உலக கிரிக்கெட்டில் அடுத்த 10 ஆண்டுகள் அல்லது அதையும் தாண்டி டாமினேட் செய்யக்கூடியவராக திகழ்வார்" என புகழாரம் சூட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories