அரசியல்

அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு.. தேர்தல் வந்தாலே இரட்டை நாக்காக மாறும் பாஜக தலைவர்கள் !

கர்நாடகாவில் தேர்தல் வரவுள்ள நிலையில், ஹிஜாப் குறித்த இந்துத்துவ கருத்துக்களை நான் ஆதரிக்கப் போவதில்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

அப்போது ஒரு பேச்சு,  இப்போது ஒரு பேச்சு.. தேர்தல் வந்தாலே இரட்டை நாக்காக மாறும் பாஜக தலைவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

அப்போது ஒரு பேச்சு,  இப்போது ஒரு பேச்சு.. தேர்தல் வந்தாலே இரட்டை நாக்காக மாறும் பாஜக தலைவர்கள் !

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அதோடு சமீபத்தில் பாஜக ஆளும் கர்நாடகாவில் கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டதும் அதற்கு ஆதரவாக பாஜக ஆதரவு அமைப்புகள் கலவரம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த கலவரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள் தற்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தங்கள் பேச்சை அப்படியே மாற்றி பேசிவருகின்றனர்.

அப்போது ஒரு பேச்சு,  இப்போது ஒரு பேச்சு.. தேர்தல் வந்தாலே இரட்டை நாக்காக மாறும் பாஜக தலைவர்கள் !

கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஹிஜாப் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "நான் இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதர சகோதரிகளாக வாழ வேண்டும். ஆரம்பத்திலிருந்தே நான் இந்த நிலைப்பாட்டை எடுத்து வருகிறேன். இவை தேவையில்லாத பிரச்சினைகள். இதுபோன்ற விஷயங்களை நான் ஆதரிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். தேர்தல் வரும் நிலையில் அவர் இப்படி பேசியுள்ளதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories