அரசியல்

பாஜக தலைவர்களின் மகள் செய்தால் அது காதல்.. பிறர் செய்தால் லவ் ஜிகாத்தா ? -சத்தீஸ்கர் முதல்வர் விமர்சனம் !

பாஜக தலைவர்களின் மகள்கள் முஸ்லிம்களைத் திருமணம் செய்தால், அது மட்டும் லவ் ஜிஹாத் அல்ல. மற்றவர்கள் செய்தால் லவ் ஜிஹாத்தா? என சத்தீஸ்கர் முதல்வர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜக தலைவர்களின் மகள் செய்தால் அது காதல்.. பிறர் செய்தால் லவ் ஜிகாத்தா ? -சத்தீஸ்கர் முதல்வர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

பாஜக தலைவர்களின் மகள் செய்தால் அது காதல்.. பிறர் செய்தால் லவ் ஜிகாத்தா ? -சத்தீஸ்கர் முதல்வர் விமர்சனம் !

அந்த வகையில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரின் பெனேதரா மாவட்டத்தின் பிரான்பூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதியன்று பள்ளிக்குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இந்த முதலில் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பு மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு அடுத்த நாள் இரண்டு முஸ்லிம்கள் காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பதற்றம் உச்சநிலையை அடைந்துள்ளது.

பாஜக தலைவர்களின் மகள் செய்தால் அது காதல்.. பிறர் செய்தால் லவ் ஜிகாத்தா ? -சத்தீஸ்கர் முதல்வர் விமர்சனம் !

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் பூபேஷ் பாகல், "இரண்டு குழந்தைகளுக்கு இடையேயான சண்டை மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது. இதனை நியாயப்படுத்த முடியாது எனினும் பா.ஜ.க-வினர் லவ் ஜிஹாத் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் மகள்கள் முஸ்லிம்களைத் திருமணம் செய்தால், அது மட்டும் லவ் ஜிஹாத் அல்ல. அவர்களின் மகள்கள் செய்தால் காதல், மற்றவர்கள் செய்தால் லவ் ஜிஹாத்தா? அவர்கள் தங்களின் மருமகன்களை அமைச்சர், எம்.பி-க்கள் என ஆக்குகிறார்கள், மற்றவர்களை மட்டும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் நடத்துகிறார்கள்" என காட்டமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories