விளையாட்டு

”எங்கு சென்றாலும் தோனி - CSK அணிக்குதான் கூட்டம் அதிகம் இருக்கும்”: மும்பை அணி பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனி எங்குச் சென்றாலும் அவருக்கு ஆதரவு இருக்கும் என மும்மை அணியின் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

”எங்கு சென்றாலும் தோனி - CSK அணிக்குதான் கூட்டம் அதிகம் இருக்கும்”: மும்பை அணி பயிற்சியாளர் ஓபன் டாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.

”எங்கு சென்றாலும் தோனி - CSK அணிக்குதான் கூட்டம் அதிகம் இருக்கும்”: மும்பை அணி பயிற்சியாளர் ஓபன் டாக்!

ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும். இந்த ஆண்டு கூட குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிய சொந்த மைதானத்தில் சென்னை விளையாடினாலும் அந்த மனிதம் சென்னை அணி ஆதரவாளர்களால் நிறைந்திருந்தது.இதுதான் சென்னை அணியின் பலமாக விளங்கிவருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டபோது மும்பை அணிக்கு ஆதரவாக MI FAN ZONE வான்கடே மைதானத்தில் இரு கேலரிகள் உருவாக்கப்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”எங்கு சென்றாலும் தோனி - CSK அணிக்குதான் கூட்டம் அதிகம் இருக்கும்”: மும்பை அணி பயிற்சியாளர் ஓபன் டாக்!

இந்நிலையில், "மும்மை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கைரன் பொல்லார்டு சென்னை அணி மற்றும் தோனிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துக் கூறிய கைரன் பொல்லார்டு, "தோனி எங்கு சென்றாலும் அவருக்கு உள்ளூர் ஆதரவு போல் ரசிகர்களின் ஆதரவு இருக்கும். ஏன் என்றால் அவர் அணிக்காக அவ்வளவு செய்துள்ளார்.

மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு இருந்த போது இந்தியாவில் நாங்கள் எங்கு சென்றாலும் அந்த ஆதரவு இருந்தது. தற்போது அதே அளவு ஆதரவு தோனிக்கும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories