தமிழ்நாடு

மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!

தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறம் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கழக நிர்வாகிகள், தோழர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வால் மாணவர்கள் மனஅழுத்தத்தால் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு மீண்டும் வினாத்தாள் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலரும் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில் தற்போதுவரை 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு தொடர்பாக ஒன்றிய அரசும் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, “நீட் தேர்வு முறையே நம்பகத்தன்மையை இழந்துவிட்டது” என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் முன்வைத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் திராவிடர் கழகம், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாளை (16.05.2026) மாநிலம் முழுவதும் “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்” நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!

இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மருத்துவக் கல்லிவக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் “நீட்” என்ற தேர்வை ஒன்றிய அரசு திணித்து, அதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு மாணவ, மாணவியர்கள் உயிர்பலி ஆகியுள்ளனர். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே-3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை ஒன்றிய பாஜக அரசே ஏற்றுக் கொண்டு இந்த அண்டு நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. எனவே, மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “திராவிடர் கழகம்” 16.05.2026 அன்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்” நடத்திட உள்ளதை தி.மு.கழகம் வரவேற்பதோடு,

தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories