அரசியல்

‘CJP கட்சியினருடன் 2-கட்ட பேச்சு வார்த்தை.. அவகாசம் கேட்ட ஒன்றிய அரசு.. நாளை முக்கிய முடிவு!’

டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், CJP கட்சியினருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அவகாசம் கேட்டுள்ளது ஒன்றிய அரசு.

‘CJP கட்சியினருடன் 2-கட்ட பேச்சு வார்த்தை.. அவகாசம் கேட்ட ஒன்றிய அரசு.. நாளை முக்கிய முடிவு!’
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

நீட் தேர்வு கேள்வி வினாத்தாள் வெளியான விவகாரத்திற்கும், கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்றும் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், ஜூன் 28-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும், ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பேரணிக்கு முந்தைய நாள் காவல்துறையினரால் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக போராட்டக்களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், கரப்பான் பூச்சி கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜூலை 20-ம் தேதி காலை நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருந்த நிலையில் கரப்பான் பூச்சி கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர்.

பேரணி வருவதைத் தொடர்ந்து ஏராளமான காவல்துறையினர் அங்குக் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தாதவாறு தடுக்கப்பட்டது. இதனால், இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் மேலும் தீவிரமானது. மாணவர்கள் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டம் மேலும் வீரியமடைந்தது. கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

‘CJP கட்சியினருடன் 2-கட்ட பேச்சு வார்த்தை.. அவகாசம் கேட்ட ஒன்றிய அரசு.. நாளை முக்கிய முடிவு!’

போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ள கரப்பான் பூச்சி கட்சியினரைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 20-ம் தேதி, கரப்பான் பூச்சி கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அமைச்சர் நட்டவுடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சோனம் வாங்கி சுக்கை விடுவிப்பது, தர்மேந்திர பிரதான் ராஜினாமா மற்றும் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்குத் தல ரூ.1 கோடி இழப்பீடு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டன.

முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இது சம்பந்தமாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே, இளைஞர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டுமென நட்டா வேண்டுகோள் விடுத்தார்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் கரப்பான் பூச்சி கட்சியினர், மாணவர்கள் உறுதிப்பட தெரிவிக்க போராட்டம் இந்தியா முழுவதும் வீரியமடைந்தது.

தொடர் போராட்டத்திற்கு நடுவே ஒன்றிய அமைச்சர் ஜே.பி நட்டாவின் அலுவலகத்தில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்ததை கரப்பான் பூச்சி கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை என ஒன்று நடைந்தால் ஜந்தர் மந்தரில் அல்லது பொதுவான ஒரு இடத்தில் தான் நடக்க வேண்டும். வேறு எங்கும் பேச்சுவார்த்தை நடத்த வரமாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 24) டெல்லி, வி.பி ஹவுசில் ஒன்றிய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்தர் சிங் ஆகியோர் பங்கேற்றனர். கரப்பான் பூச்சி கட்சி சார்பில் சவுரவ் தாஸ் மற்றும் அஷூதோ ரன்கா ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 2 மணிநேரம் நீடித்தது.

பேச்சுவார்த்தைக்கு பின்பு பேட்டியளித்த கரப்பான் பூச்சி கட்சியினர்,

பேச்சுவார்த்தையின் போது தாங்கள் முன் வைத்த 3 கோரிக்கைகளை கூறினர்.

அதன்படி, 1. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

2. நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு.

3. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதில் 2 கோரிக்கைகள் மீது அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை குறித்து பேட்டியளித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா மாணவர்களின் கோரிக்கைகளை முழுமையாக கேட்டுள்ளோம். நாளை (ஜூலை 25) அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

3 கோரிக்கைகளில் முக்கியக் கோரிக்கையான ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது பிரதானக் கோரிக்கையாக உள்ளதால், இதுகுறித்து ஒன்றிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தங்களுக்கு அவகாசம் வேண்டும் எனவும் ஒன்றிய அரசு தரப்பு தெரிவித்துள்ளதாகவும், இதன் இறுதி முடிவு நாளை தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories