விளையாட்டு

PSG அணியோடு முடிந்த ஒப்பந்தம். மீண்டும் தாய் கழகத்தில் இணையும் மெஸ்ஸி ? உற்சாகத்தில் Barcelona ரசிகர்கள்!

மெஸ்ஸி நிச்சயம் PSG அணியில் இருந்து வெளியேறி மீண்டும் பார்சிலோனா அணியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

PSG அணியோடு முடிந்த ஒப்பந்தம். மீண்டும் தாய் கழகத்தில் இணையும் மெஸ்ஸி ? உற்சாகத்தில் Barcelona ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PSG அணியோடு முடிந்த ஒப்பந்தம். மீண்டும் தாய் கழகத்தில் இணையும் மெஸ்ஸி ? உற்சாகத்தில் Barcelona ரசிகர்கள்!

அதேபோல அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரே கால்பந்து லீக்கில் விளையாடும் வாய்ப்பு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. '

PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

PSG அணியோடு முடிந்த ஒப்பந்தம். மீண்டும் தாய் கழகத்தில் இணையும் மெஸ்ஸி ? உற்சாகத்தில் Barcelona ரசிகர்கள்!

மேலும், மெஸ்ஸியின் நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் நிச்சயம் PSG அணியில் இருந்து வெளியேறி மீண்டும் பார்சிலோனா அணியில் இணைவார் என்று கூறப்பட்டு வருகிறது. பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி 672 கோல்களை அடித்துள்ளார் என்பதும் அவரின் பல சாதனைகள் அந்த அணிக்காக ஆடும்போதுதான் படைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories