அரசியல்

அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?

பா.ஜ.க.வின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நாள்தோறும் நீண்டுகொண்டே செல்கிறதே தவிர, குறைந்ததாக இல்லை.

அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அளவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்கும் வெறுப்பு அரசியலை துளியும் தயக்கமின்றி பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது.

பிறப்பின் பெயரால் மனிதர்களிடம் பிளவுகளை உண்டாக்கும் கொள்கைகளை ஏந்தி செயல்படும் ஆர்.எஸ்.எஸ்-ஐ தாய் இயக்கமாக கொண்டு இயங்கும் பா.ஜ.க, ஒன்றியத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தது முதல் தனது வெறுப்பு நடவடிக்கைகளை கூடுதலாகவே செயல்படுத்தி வருகிறது.

  • இந்தியக் குடியுரிமையை சிறுபான்மையினர்களிடம் இருந்து பறிக்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயலாக்கம்;

  • எளியவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை காணாமல் போகசெய்யும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR);

  • கல்வியில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் பள்ளிக் கல்வியில் புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP), உயர்கல்வியில் சனாதன பாடத்திட்டங்கள்;

அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
  • இஸ்லாமியர்களின் உடைமைகளை சூறையாடும் வகையில் புல்டோசர் நடவடிக்கைகள், அதனை கேள்வி கேட்பவர்கள் மீது பா.ஜ.க அரசின் அதிகாரிகளே முன்னெடுக்கும் துப்பாக்கிச்சூடுகள்;

  • மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் தேவையற்ற வெறுப்பு பேச்சுகள், அதனால் உண்டாகும் கலவரங்கள், உயிர் சேதங்கள்;

  • சம உரிமை, சமூகநீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் VB G RAM G, அக்னிபாத், தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட - திட்டங்கள்;

  • பெண்களுக்கு எதிராக நாள்தோறும் அரங்கேறி வரும் குற்றங்கள், அதன் பின்னணியில் செயல்பட்டு தண்டனையில் சிக்காத பா.ஜ.க பிரமுகர்கள் (பிரிஜ் பூஷன் போன்ற எண்ணற்றோர்);

  • எளியவர்களின் வாழ்வியலை கேள்விக்குள்ளாக்கும் வகையில் முதலாளித்துவ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தனியார்மயமாக்கல்;

என பா.ஜ.க.வின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நாள்தோறும் நீண்டுகொண்டே செல்கிறதே தவிர, குறைந்ததாக இல்லை.

அவ்வரிசையில் புதிய அச்சுறுத்தலை உண்டாக்கும் வகையில், அசாம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பா.ஜ.க சமூக வலைதளப் பக்கம், வெறுப்பை உண்டாக்கும் ஒரு காணொளியை பதிவு செய்தது.

அக்காணொளியில், பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா, இஸ்லாமியர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற வெறுப்புணர்வுமிக்க காட்சி இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அப்பதிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளிக்க இயலாமல், சில மணிநேரங்களில் அப்பதிவை நீக்கியது அசாம் பா.ஜ.க. எனினும், அது குறித்து இதுவரை எவ்வித மன்னிப்போ, வருத்தமோ பா.ஜ.க சார்பிலிருந்து வெளியாகவில்லை.

காரணம், பதிவை நீக்கினாலும் தன் நிலைப்பாட்டிலிருந்து பா.ஜ.க பின்வாங்குவதாக இல்லை என்பதுதான்.

அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?

இந்நிலையில், இதனை விமர்சிக்கும் வகையில், ஊடகவியலாளர் முகமது சுபைர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு இனத்தின் மீது வெறுப்பை உமிழ்கிற காணொளியை யார் பதிவு செய்திருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

ஆனால், அசாம் பா.ஜ.க மட்டும் அதிலிருந்து எளிதாக தப்பித்துக்கொண்டுள்ளது. பா.ஜ.க மீது FIR பதிய முற்பாட்டால்கூட, நாங்கள் தான் அந்த காணொளியை நீக்கி விட்டோமே என பதிலளித்து சாதிக்க திட்டமிடுகிறது பா.ஜ.க” என பதிவிட்டுள்ளார்.

அவரது நியாயமான கேள்வியை தேசிய அளவில் பலரும் மேற்கோள்காட்டி வருவது மட்டுமல்லாமல், பல கேள்விகளையும், கண்டனங்களையும் பா.ஜ.க.விடம் முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், தொடர்ந்து இல்லாத மத சிக்கல்களை உருவாக்கும் பா.ஜ.க, தான் முன்னெடுக்கும் வெறுப்புகளுக்கு எதிராக எழும் விமர்சனங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது, மக்களை புறந்தள்ளும் வகையிலேயே அமைந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories