தமிழ்நாடு

“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு தி.மு.க சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு பதிலடி கொடுத்தார்.

“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின் போது அமைச்சர் ரமேஷ், தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற வேளாண் திட்டங்கள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 18 மாவட்டங்களின் 54 இடங்களில் 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 383 நவீன நெல் சேமிப்பு தளங்களை ரூ.825.79 கோடி மதிப்பீட்டில் அமைக்க உத்தரவிடப்பட்டு, 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன நெல் சேமிப்பு தளங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மீதமுள்ள நெல் சேமிப்பு தளங்களின் கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதனை உங்கள் முதல்வர் விரைவில் திறக்க வாய்ப்பிருக்கிறது.” பேசினார்.

அதேபோல் விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு தி.மு.க சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு பதிலடி கொடுத்தார்.

அப்போது பேசிய எ.வ.வேலு ”நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து நிதிச் செயலாளருடன் விரிவாக விவாதித்தோம். நிதி இல்லாத காரணத்தினால்தான் விவசாயிகள் கடன் தள்ளுபடியை தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவில்லை.

விவசாயிகளைச் சிறு விவசாயி, பெரு விவசாயி என்று பிரித்துப் பார்க்க முடியாது. நீங்கள் பிரித்துப் பார்த்ததால்தான் இன்று விவசாயிகள் போராடுகிறார்கள்." என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories