அரசியல்

16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!

“சத்துணவை சத்தில்லாத உணவாக மாற்றி மாணவர்களுக்கு வழங்கி ஏமாற்றத்தின் மொத்த வடிவமாகத் திகழ்கிறது தவெக அரசு” என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்கள் முட்டைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் முட்டைகள் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவுடன் வழங்கப்பட்டு வந்த முட்டை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருப்பூர், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் காமராசரால் தொடங்கப்பட்டு, எம்.ஜி.ஆரால் ‘சத்துணவுத் திட்டமாக’ விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1989-ம் ஆண்டு முதன்முதலில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்கும் முறையைக் கொண்டு வந்தார்.

16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!

பின்னர், ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்க, 2010-ஆம் ஆண்டு முதல் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 16 ஆண்டுகளாக வாரம் 5 நாட்கள் சீராக வழங்கப்பட்டு வந்த முட்டைகள், தவெக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவோடு சேர்த்து முட்டை வழங்காததன் பின்னணியில், எண்ணிக்கைக்கு ஏற்ற முட்டை கொள்முதல் முறையாக நடைபெறாததும், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக நலத்துறை முற்றிலுமாக முடங்கியிருப்பதுமே காரணம் எனத் தெரிய வருகிறது.

‘மாற்றம், மாற்றம்’ என தம்பட்டம் அடிக்கும் தவெக அரசு, சத்துணவை சத்தில்லாத உணவாக மாற்றி மாணவர்களுக்கு வழங்கி ஏமாற்றத்தின் மொத்த வடிவமாகத் திகழ்கிறது.

காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரால் பார்த்துப் பார்த்து கொண்டு வரப்பட்ட முத்திரைத் திட்டங்களையே சீராக செயல்படுத்த முடியாத நிர்வாகத் திறனற்ற தவெக அரசு, முட்டை விநியோகத்தை உடனடியாக சீர்செய்ய வேண்டும் என துறை அமைச்சரையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.”

banner

Related Stories

Related Stories