விளையாட்டு

காது கேட்கலயா ? இப்போ கேட்டு இருக்குமே ! -வங்கதேச வீரருக்கு களத்திலேயே பதிலடி கொடுத்த விராட் கோலி !

வங்கதேச வீரர் லிட்டன் தாஸுக்கு விராட் கோலி, தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்த புகைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.

காது கேட்கலயா ? இப்போ கேட்டு இருக்குமே ! -வங்கதேச வீரருக்கு களத்திலேயே பதிலடி  கொடுத்த விராட் கோலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த நிலையில் இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்று 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை குவித்த இந்திய அணி 2-வது நாளான இன்றுஆட்டத்தை தொடர்ந்தது.

காது கேட்கலயா ? இப்போ கேட்டு இருக்குமே ! -வங்கதேச வீரருக்கு களத்திலேயே பதிலடி  கொடுத்த விராட் கோலி !

சிறப்பாக ஆடிவந்த ஸ்ரேயாஸ் 86 ரன்களில் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த அஸ்வின், குல்தீப் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்வின் 58 ரன்களிலும், குல்தீப் 40 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 404 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. Najmul hussain, Zahir hassan, யாசிர் அலி, லிட்டன் தாஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னோடு வந்த வேகத்திலேயே நடையை கட்டினர். 2ம் நாள் முடிவடைந்த நிலையில், வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

காது கேட்கலயா ? இப்போ கேட்டு இருக்குமே ! -வங்கதேச வீரருக்கு களத்திலேயே பதிலடி  கொடுத்த விராட் கோலி !

இந்திய தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். தற்போதைய நன்மையில், இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் போது நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த போட்டியில் சிராஜ் பந்துவீச வந்த போது, வங்கதேச வீரர் லிட்டன் தாஸை பார்த்து சிராஜ் ஏதோ கூறியநிலையில், அதற்கு தனது காதில் எதும் விழவில்லை என்று லிட்டன் தாஸ் சிராஜை கிண்டல் செய்தார். ஆனால் இதற்கு அடுத்த பந்திலேயே லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தினார்.

காது கேட்கலயா ? இப்போ கேட்டு இருக்குமே ! -வங்கதேச வீரருக்கு களத்திலேயே பதிலடி  கொடுத்த விராட் கோலி !

அப்போது சிராஜ் தனது வாயில் விரல் வைத்து சத்தம் வரக் கூடாது என்று சொல்லும் வகையில் செய்கை செய்ய மற்றொரு பக்கம் விராட் கோலி, தனக்கே உரிய பாணியில் லிட்டன் தாஸ் என்ன செய்தாரோ அதையே செய்தார். இது தொடர்பாக புகைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.

banner

Related Stories

Related Stories