விளையாட்டு

திக் திக் கடைசி ஓவர்.. 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி!

டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

திக் திக் கடைசி ஓவர்.. 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுல் அதிரடியாக 50 ரன்கள் அடித்தார். அதேபோல் வீராட் கோலியும் 64 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடுத்தது.

திக் திக் கடைசி ஓவர்.. 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி!

பின்னர் விளையாடிய வாங்கதேச துவக்க வீரர்கள் சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடி 7 ஓவர்முடிவில் விக்கெட் கொடுக்காமல் 66 ரன்களை சேர்த்திருந்தனர். அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது.

பிறகு மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணி 16 ஓவரில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விளையாடிய வங்கதேச வீரர்கள் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்தனர்.

திக் திக் கடைசி ஓவர்.. 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி!

இதையடுத்து கடைசி ஓவரில் 6 பந்திற்கு 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்தது. அப்போது இந்திய அணி பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்துகளைச் சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தடுமாறினர். பிறகு 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. மேலும் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories