விளையாட்டு

"நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல இங்குவரவில்லை" - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வங்கதேச கேப்டன் !

இந்திய அணியினர் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை என வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார்.

"நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல இங்குவரவில்லை" - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வங்கதேச கேப்டன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

"நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல இங்குவரவில்லை" - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வங்கதேச கேப்டன் !

இந்த கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அடுத்ததாக நெதர்லாந்து அணியுடனான போட்டியில் சிறப்பாக ஆடிய கோலி-சூரியகுமார் யாதவ் இணை சிறப்பாக ஆடியது. அந்த போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. ஆனால் அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

அதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்த போட்டியில் வங்கதேச அணியை சந்திக்கவுள்ளது. வங்கதேச அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி தொடர்பாக வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

"நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல இங்குவரவில்லை" - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வங்கதேச கேப்டன் !

அப்போது பேசிய அவர், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எங்களால் அதைச் செய்ய முடிந்தால், நான் மகிழ்ச்சியடைவேன். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக எங்களால் வெற்றி பெற முடிந்தால் அது சிறப்பானது. ஏனெனில் இரு அணிகளும் எங்களை விட சிறந்தவை.

வங்காளதேசம் - இந்தியா அணிகளுக்கிடையேயான ஆட்டமாக விறுவிறுப்பாக இருக்கும். இந்தியா எங்கு விளையாடினாலும் அந்த அணிக்கு பெரிய ஆதரவு கிடைக்கிறது. இந்திய அணியினர் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை என்றாலும் நாளைய போட்டியில் இந்தியாவை வீழ்த்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories