உலகம்

இறந்துபோன மகளை மீண்டும் பார்த்த தாய்.. சாதனை படைத்த தொழில்நுட்ப நிபுணர்கள்.. நெகிழ்ச்சி வீடியோ !

virtual reality தொழில்நுட்பம் மூலம் தொழில்நுட்ப நிபுணர்கள் இறந்து போன மகளின் உருவத்தை உருவாக்கி அதன்மூலம் தாயை தங்கள் மகளை மீண்டும் காணவைத்துள்ளனர்.

இறந்துபோன மகளை மீண்டும் பார்த்த தாய்.. சாதனை படைத்த தொழில்நுட்ப நிபுணர்கள்.. நெகிழ்ச்சி வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

Metaverse என்பது மெய்நிகர் சூழல். அதற்குள் நீங்கள் சென்று வெறும் திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக மெய் நிகர் உபகரணங்களான ஹெட்மசெட், ரியாலிட்டி கிளாஸ், ஸ்மார்ட்ஃபோன் ஆப், உள்ளி்ட்ட பல உபகரணங்கள் மூலம் மக்களுடன் சந்திக்கலாம், உரையாடலாம், விளையாடலாம்.

இணையதளத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. அதாவது இப்போது நாம் நிஜத்தில் பார்க்கும் உலகத்தை போல முழுக்க முழுக்க இணையத்தில் உருவாக்கப்படும் உலகம்தான் Metaverse. அதில் இறந்துபோன நபர், அல்லது நாம் கற்பனை செய்யும் உருவம், உலகையும் அதில் உருவாக்கலாம். அடுத்த தலைமுறை முழுக்க முழுக்க Metaverse-ஐ மையபடுத்தியே இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இறந்துபோன மகளை மீண்டும் பார்த்த தாய்.. சாதனை படைத்த தொழில்நுட்ப நிபுணர்கள்.. நெகிழ்ச்சி வீடியோ !

இதன் காரணமாகதான் பேஸ்புக் நிறுவனமே தங்கள் பெயரை மெட்டா என மாற்றிக்கொண்டனர். தற்போதே இந்த Metaverse உலகில் பல விஷயங்கள் நடந்து வருகிறது. அப்படி இறந்துபோன மகளின் உருவை Metaverse உலகில் உருவாக்கி நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.

virtual reality என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் மூலம் இறந்து போன மகளின் உருவத்தை உருவாக்கி அதன்மூலம் தாயை தங்கள் மகளை தொழில்நுட்ப நிபுணர்கள் மீண்டும் காணவைத்துள்ளனர். இந்த நிகழ்வு நடக்கும்போது அந்த தாய் அழுதது பார்ப்போம் நெஞ்சங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த இணையவாசிகள் இந்த வீடீயோவையோ பகிர்ந்து தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories