விளையாட்டு

'கே.எல்.ராகுல் தன் ஆட்டத்தை சுவிட்ச் ஆன் செய்வார்': விமர்சனங்களுக்கு நடுவே ஆதரவு குரல் கொடுத்த கும்ப்ளே!

உலக கோப்பைத் தொடரில் தொடர்ந்து ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்து வருவதால் கே.எல்.ராகுலை ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

'கே.எல்.ராகுல் தன் ஆட்டத்தை சுவிட்ச் ஆன் செய்வார்': விமர்சனங்களுக்கு நடுவே ஆதரவு குரல் கொடுத்த கும்ப்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய பேட்ஸ்மேன் கே.எல் ராகுலின் தடுமாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவர். பாகிஸ்தானுக்கு எதிராக 4 ரன்களுக்கு ஆட்டமிழந்த ராகுல், இப்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்ற வாதமும் அதிகரித்துவருகிறது.

காயத்தால் அவதிப்பட்டுவந்த ராகுல், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து இரண்டு அரை சதங்கள் அடித்தார். ஆனால் அதில் ஒரு போட்டியில் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் அவர். பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியில் ராகுலின் பயிற்சியாளராக இருந்த அணில் கும்பிளே, ராகுல் தன் ஆட்டத்தை 'ஸ்விட்ச் ஆன்' செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

'கே.எல்.ராகுல் தன் ஆட்டத்தை சுவிட்ச் ஆன் செய்வார்': விமர்சனங்களுக்கு நடுவே ஆதரவு குரல் கொடுத்த கும்ப்ளே!

"ஐ.பி.எல் தொடரைப் பொறுத்தவரை அது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை. அதேசமயம் இந்திய அணிக்கு விளையாடுவது என்பது வேறு. நாங்கள் அனைவரும் நீ தான் சிறந்த வீரர். போய் உன் வழக்கமான ஆட்டத்தை ஆடு, முதல் பந்தில் இருந்து அதிரடியாக அடித்து ஆடு என்று பல விஷயங்கள் சொல்வோம். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் எந்த பௌலராலும் அவரை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் ஐ.பி.எல் தொடரில் ஆடும்போது அவருடைய சூழ்நிலை வேறு. அவர் தான் அணியின் கேப்டன். அதுமட்டுமல்லாமல் அணியின் லைன் அப்பையும் கறுத்தில் கொண்டு, அவர் அதிக நேரம் களத்தில் இருக்கவேண்டும் என்று நினைத்தார். வெளியில் இருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், களத்துக்குள் இருப்பதையெல்லாம் உங்களால் கன்ட்ரோல் செய்திட முடியாது" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் கும்ப்ளே.

'கே.எல்.ராகுல் தன் ஆட்டத்தை சுவிட்ச் ஆன் செய்வார்': விமர்சனங்களுக்கு நடுவே ஆதரவு குரல் கொடுத்த கும்ப்ளே!

"இந்திய அணியைப் பொறுத்தவரை அது மிகவும் வித்தியாசமானது. அவருடைய ரோல் களத்துக்குள் சென்று அவருடைய ஆட்டத்தை ஆடுவது மட்டும்தான். நான் பயிற்சியாளராக இருக்கும்போது அதை மாற்ற நினைக்கவில்லை. களத்துக்குள் அவர் கே.எல் ராகுலாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும், முதல் பந்தில் இருந்தே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்றும் தான் நான் நினைத்தேன். பஞ்சாப் அணிக்காக அந்தக் கடைசிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஆடும்போது பெரிய ரன் ரேட் தேவைப்பட்டது. அந்தப் போட்டியில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை அனைவரும் பார்த்தோம். பல சர்வதேச பௌலர்களைப் பந்தாடினார் அவர்" என்று கூறினார் கும்ப்ளே.

2021 ஐபிஎல் தொடரில் நடந்த அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு ரன்ரேட்டை அதிகப்படுத்தவேண்டிய நெருக்கடி இருந்தது. அந்தப் போட்டியில் 42 பந்துகளில் 98 ரன்கள் விளாசிய ராகுல், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்தார். 42 பந்துகள் மீதமிருக்கையிலேயே அந்தப் போட்டியை வென்றது பஞ்சாப். "ராகுலை பொறுத்தவரை அவர் தன் ஆட்டத்தை ஸ்விட்ச் ஆன் செய்தால் போதும். அந்த குறிப்பிட்ட நாளில் அவர் நம்பிக்கையோடு போட்டியை எதிர்கொள்வதில் தான் இருக்கிறது" என்று கூறினார் அனில் கும்ப்ளே.

banner

Related Stories

Related Stories