விளையாட்டு

“அடுத்த போட்டிக்குள் சில பிரச்சனைகளை சரி செய்யவேண்டும்” - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த கபில் தேவ்!

2 போட்டியை இந்திய அணி வென்றிருந்தாலும், ரோஹித் அண்ட் கோவிற்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

“அடுத்த போட்டிக்குள் சில பிரச்சனைகளை சரி செய்யவேண்டும்” - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த கபில் தேவ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி. பாகிஸ்தான், நெதர்லாந்து அனிகளை அடுத்தடுத்து வீழ்த்தியிருக்கும் இந்திய அணி மட்டுமே இந்த உலகக் கோப்பையில் இன்னும் தோல்வியைச் சந்திக்காமல் இருக்கிறது.

இன்னும் ஒரு போட்டியில் வென்றுவிட்டால் கூட அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்த, பௌலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு போட்டியை அபாரமாக வென்றது நெதர்லாந்து.

“அடுத்த போட்டிக்குள் சில பிரச்சனைகளை சரி செய்யவேண்டும்” - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த கபில் தேவ்!

இந்தப் போட்டியை இந்திய அணி வென்றிருந்தாலும், ரோஹித் அண்ட் கோவிற்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். அடுத்த போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்க அணியை பெர்த் மைதானத்தில் எதிர்கொள்கிறது இந்தியா.

அந்தப் போட்டிக்கு முன்பு ஒரு சில பிரச்சனைகளை இந்திய அணி சரிசெய்யவேண்டும் என்றும், இல்லையெனில் அது பெரிய பிரச்சனையாகிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார். விமர்சனத்தை சந்தித்து வந்த இந்திய பந்துவீச்சு சற்று முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் சில பிரச்சனைகளை சரிசெய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

"பந்துவீச்சு நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. பேட்டிங்கில் இந்திய அணி இன்னும் சற்று சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். கடைசி 10 ஓவர்களில் நன்றாக விளையாடி சரி செய்துவிட்டார்கள். இங்கே மைதானங்கள் மிகவும் பெரிது. அதனால் ஸ்பின்னர்களுக்கு சில சாதகங்கள் இருக்கின்றன. பந்துவீச்சிலும் சில முன்னேற்றங்கள் காண வேண்டும் என்று நான் சொல்வேன்" என ஒரு ஊடகத்துக்குக் கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் கபில் தேவ்.

“அடுத்த போட்டிக்குள் சில பிரச்சனைகளை சரி செய்யவேண்டும்” - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த கபில் தேவ்!

"நெதர்லாந்து போன்ற ஒரு அணிக்கு எதிராக எந்த லைனில், லென்த்தில் பந்துவீசவேண்டும் என்று சரியான திட்டமிடல் இருந்திருக்கவேண்டும். முக்கியமான விஷயம் என்னவெனில், இதுபோன்ற போட்டிகளில் நோ பால்களோ, வைட் பந்துகளோ அமைந்துவிடக்கூடாது. ஏனெனில், நீங்கள் பயிற்சி பெறுகிறீர்கள். அதுமட்டுமல்லாமல் போட்டியையும் வென்றாகவேண்டும். ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டுமெனில், பந்துவீச்சு சற்று சிறப்பாக இருக்கிறது. ஆனால் அதில் இன்னும் சில பிரச்சனைகள் இருக்கவே செய்கிறது" என்று கூறியிருக்கிறார் கபில் தேவ்.

இந்திய அணி இந்தப் போட்டியை மிகவும் கவனமாக தொடங்கியது. அதன் பின் ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து 95 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 112 ரன்கள் விளாசியது. பந்துவீசியபோது 3 வைட்களும், ஒரு நோ பாலும் வீசியது இந்திய அணி.

“அடுத்த போட்டிக்குள் சில பிரச்சனைகளை சரி செய்யவேண்டும்” - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த கபில் தேவ்!

இது அவ்வளவு பெரிய தவறு இல்லை என்றாலும், நெதர்லாந்து போன்ற ஒரு அணிக்கு எதிராக இது நடக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார் கபில் தேவ். "இந்த அணியில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். ரன்களை மிக வேகமாக அடிக்கும் அவரை பாராட்டியே ஆகவேண்டும். இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடவேண்டும். கே.எல்.ராகுல் ரன்கள் அடித்தே ஆகவேண்டும்.

கோலி ஆங்கர் ரோல் ஆடவேண்டும். ஏனெனில் அவரால் அதன்பின் அதிரடி காட்ட முடியும். அவர் 20 ஓவர்கள் நின்று ஆடினால், இந்திய அணியால் எப்பேர்ப்பட்ட ஸ்கோரையும் சேஸ் செய்ய முடியும். கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக இந்த வீரரைக் காண முடியாமல் தான் நாம் தடுமாறிக்கொண்டிருந்தோம்" என்று கூறியிறுக்கிறார் கபில் தேவ்.

banner

Related Stories

Related Stories