விளையாட்டு

"இது நடந்திருந்தால் அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன்" - பரபரப்பான நிமிடம் குறித்து விவரித்த அஸ்வின் !

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து பேடில் பட்டிருந்தால் ட்விட்டர் பக்கத்தின் மூலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையே அறிவித்திருப்பேன் என அஸ்வின் கூறியுள்ளார்.

"இது நடந்திருந்தால் அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன்" - பரபரப்பான நிமிடம் குறித்து விவரித்த அஸ்வின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

"இது நடந்திருந்தால் அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன்" - பரபரப்பான நிமிடம் குறித்து விவரித்த அஸ்வின் !

ஆட்டத்தின் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. ஆனால் அதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி ஜோடி, விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக ஆடியது. இந்திய வெற்றிக்கு இறுதியில் 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாஹீன் அப்ரிடி வீசிய அடுத்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுக்கப்பட்டது.

பின்னர் 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹாரிஸ் ரவுப் அந்த ஒவரில் 15 ரன்கள் விலாசப்பட்டது. இறுதி ஓவரை முஹம்மது நவாஸ் வீச முதல் பந்திலேயே பாண்டியா ஆட்டம் இழந்தார். 5 பந்துக்கு 16 ரன்கள் தேவை பட அடுத்து வந்த கார்த்திக் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்தில் கோலி 2 ரன்கள் ஓடி, தொடர்ந்த வந்த இறுதி ஓவரின் 4-வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார். இடுப்பு உயரத்துக்கு வந்த அந்த பந்தை நடுவர் நோ பால் என அறிவிக்க அடுத்த பந்து வைட் ஆக, தொடர்ந்து வந்த ப்ரீ ஹிட் பந்து ஸ்டம்பை தாக்க அதன் மூலம் 3 ரன்கள் எடுத்தார் கோலி.

"இது நடந்திருந்தால் அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன்" - பரபரப்பான நிமிடம் குறித்து விவரித்த அஸ்வின் !

இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட தேவையில்லாமல் ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். இதனால் களத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அடுத்த அஸ்வின் வந்தபோது வெற்றிபெற 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்துவீசிய நவாஸ் வைட் வீசினார். இதனால் இந்தியாவுக்கு ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தை அஸ்வின் அழகாக மிட் ஆஃப் திசையில் தூக்கிவிட்டு, வெற்றிக்கு தேவையான அந்த ஒரு ரன்னை எடுக்க இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையிலும் இது குறித்த பேச்சு தற்போதும் தொடர்ந்து வருகிறது. டி20 தொடரின் சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று என கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த போட்டியின் இறுதி நாயகன் அஸ்வின் இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். அதில், கடைசி பந்தில் நான் ரன் எடுத்த போது தான் எனக்கு நிம்மதியே வந்தது. அதே போல் நவாஸ் வீசிய வொய்ட் பந்து ஒருவேளை, வொய்டாக செல்லாமல், சுழன்று வந்து எனது பேடில் பட்டிருந்தால், நேராக எனது அறைக்கு சென்று எனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையே அறிவித்திருப்பேன்" என விளையாட்டாக கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அதைதான் அவர் செய்திருக்கவேண்டிய நிலை வந்துருக்கும் என்பதால் அவர் இதனை சீரியசாகவே சொன்னார் என்றே எடுத்துக்கொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories