விளையாட்டு

கூடுதல் அணிகள்; கூடுதல் வாய்ப்புகள்; கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள் - தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறதா?

ஐ.பி.எல் சீசனில் கூடுதலாக அணிகள் இணைக்கப்பட்டது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா அல்லது நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறதா என பார்ப்போம்.

கூடுதல் அணிகள்; கூடுதல் வாய்ப்புகள்; கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள் - தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடந்துக் கொண்டிருக்கும் 15 வது ஐ.பி.எல் சீசன் கடந்த சில சீசன்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. ஏனெனில், கடந்த சில சீசன்களாக எட்டு அணிகளே ஐ.பி.எல் தொடரில் ஆடி வந்தது. இந்த சீசனிலிலிருந்து அவற்றின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது. பிசிசிஐ சார்பில் கூடுதலாக இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்ட போது அந்த முடிவிற்கு கலவையான வரவேற்பே கிடைத்திருந்தது. கூடுதல் இரண்டு அணிகள் என்பது ஐ.பி.எல் இன் சுவாரஸ்யத்தையே குறைத்துவிடும். மேலும், போட்டி நடைபெறும் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ரசிகர்களை குழப்பமடையச் செய்யும் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. ஹர்ஷா போக்ளே போன்ற மூத்த வர்ணனையாளர்களே இந்த விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்திருந்தனர்.

இப்போது இந்த ஐ.பி.எல் சீசன் ஆரம்பித்து ஏறக்குறைய 10 நாட்கள் முடிந்துவிட்டது. இந்நிலையில் கூடுதலாக அணிகள் இணைக்கப்பட்டது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா அல்லது நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறதா என பார்ப்போம்.

10 அணிகள் இடம்பெற்றிருப்பதால் கூடுதலான வீரர்களுக்கு தேவை ஏற்பட்டது. ஏனெனில் ஒரு அணிக்கு 25 வீரர்கள் தேவை என்ற போது கூடுதலாக இரண்டு அணிகள் வரும்போது கூடுதலாக 50 வீரர்கள் தேவைப்பட்டனர். இதனால் வீரர்களுக்கான டிமாண்ட் அதிகரித்தது. கூடுதலாக தேவைப்படும் வீரர்களின் இடத்தில் ஸ்டார் வீரர்களை வைத்து மட்டும்தான் நிரப்புவேன் என அணிகள் அடம்பிடிக்க முடியாது. இதனால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

கடந்த சீசனிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததுதான் ஆனால், அந்த இளம் வீரர்கள் பெரும்பாலும் பென்ச்சிலேயே வைக்கப்பட்டிருப்பார்கள். அணியின் ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது ரொம்பவே கடினம். ஆனால், இந்த முறை அதிக அணிகள் இருப்பதால் அதிக இளம் வீரர்களுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்திருக்கிறது.

சென்னை அணி எப்போதுமே இளம் வீரர்களை தள்ளி வைத்தே பார்க்கும். இளம் வீரர்கள் அந்த அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவது அவ்வளவு கடினமாக இருக்கும். ஆனால், இந்த முறை தொடக்கத்திலேயே முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே போன்ற இளம் பௌலர்களை சென்னை அணி ப்ளேயிங் லெவனில் எடுத்திருந்தது.

மும்பை அணிக்காக மிடில் ஆர்டரில் அன்மோல்ப்ரீத் சிங்கும் திலக் வர்மாவும் ஆடி வருகின்றனர். இருவருமே இளைஞர்கள். இதில், குறிப்பாக திலக் வர்மா சூர்யகுமார் யாதவ் இல்லாத சூழலில் மும்பையின் மிடில் ஆர்டரை தாங்கி பிடிக்கிறார். ஆடிய இரண்டாவது போட்டியிலேயே அதிரடியாக அரைசதம் அடித்திருக்கிறார்.

லக்னோ அணியில் ஆடிய முதல் போட்டியிலேயே ஆயுஷ் பதோனி என்கிற இளைஞர் அரைசதம் அடித்திருந்தார். ஆடியிருக்கும் மூன்று போட்டிகளிலுமே பட்டையை கிளப்பியிருக்கிறார்.புத்திக்கூர்மைமிக்க கிரிக்கெட்டர் என பெயரும் எடுத்துவிட்டார். அதே லக்னோ அணியின் மோஷின் கான் எனும் பௌலர் ஒருவருக்கும் ப்ளேயிங் லெவனில் நல்ல வாய்ப்பு கிடைத்திருந்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணையின் அபினவ் மனோகர் ஆடிய முதல் போட்டியிலேயே டெத் ஓவரில் பவுண்டரிக்களை அடித்து அசத்தியிருந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னைக்கு எதிரான போட்டியில் ஒரே ஆட்டத்தில் இரண்டு வீரர்களை அறிமுகப்படுத்தியிருந்தது. மிடில் ஆர்டரில் இறங்கிய ஜித்தேஷ் சர்மா நல்ல அதிரடியாக ஆடி அசத்தினார். பௌலரான வைபவ் மனோகர் பவர்ப்ளேயில் சென்னையின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

சீசன் ஆரம்பித்த 10 நாட்களிலேயே இத்தனை இளம் வீரர்கள் புதிதாக தொப்பி வாங்கி அணிகளின் ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்து சிறப்பாக ஆடியும் காட்டியிருப்பது கடந்த சீசன்களில் நடக்காதவை. அந்த வகையில் கூடுதல் அணிகள் இடம்பெற்று வீரர்களுக்கான டிமாண்ட் கூடியது ஒரு நல்ல விளைவையே ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories