விளையாட்டு

"டைவ் அடித்து தொட்டிருக்கலாம்.. நான் ஏன் அதை செய்யவில்லை?" - உலகக்கோப்பை ரன்அவுட் குறித்து தோனி உருக்கம்!

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தான் ரன்-அவுட் ஆனது குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் எம்.எஸ்.தோனி.

"டைவ் அடித்து தொட்டிருக்கலாம்.. நான் ஏன் அதை செய்யவில்லை?" - உலகக்கோப்பை ரன்அவுட் குறித்து தோனி உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியா தருணமாக அமைந்தது. அரையிறுதியில் சேசிங்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் டாப் வரிசையில் வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஏமாற்றமாய் இருந்த ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் விளையாடினார் தோனி.

ஜடேஜாவுடன் கைகோர்த்து விளையாடிய தோனி எதிரணியை அச்சுறுத்தி, ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில், பெர்குசன் வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்டி ரசிகர்களை குதூகலப்படுத்திய, அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

"டைவ் அடித்து தொட்டிருக்கலாம்.. நான் ஏன் அதை செய்யவில்லை?" - உலகக்கோப்பை ரன்அவுட் குறித்து தோனி உருக்கம்!

பெர்குசன் வீசிய மூன்றாவது பந்தில் தோனி இரண்டு ரன்கள் எடுக்க முயல, பந்தை எடுத்த கப்தில் ஸ்டெம்பை நோக்கி தூக்கி எறிந்தது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பும் ஒரு நொடி நின்று போன தருணம். நடுவர்கள் ஆய்வு செய்ய தோனியின் பேட், க்ரீஸுக்கு இரண்டு இன்ச் வெளியில் இருந்தது. மூன்றாவது நடுவர்கள் அவுட் வழங்க தோனி ஏமாற்றத்துடன் களத்தில் இருந்து மாற்றத்துடன் வெளியேறிய தருணம், நிலைகுலையச் செய்தது.

இந்த ஏமாற்றத்துடன் உலகக்கோப்பை தொடருக்கு பின்பு தோனி இரண்டு மாத ஓய்வில் இருந்து இராணுவத்தில் பணிபுரிந்தார். அதற்குப் பின்னால் நடைபெற்ற தொடர்களில் தோனி விளையாடவில்லை. ஒருபுறம், தோனி எப்போது ஓய்வு பெறுவார் என அவரை பற்றிய தொடர் சர்ச்சைகள் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன.

"டைவ் அடித்து தொட்டிருக்கலாம்.. நான் ஏன் அதை செய்யவில்லை?" - உலகக்கோப்பை ரன்அவுட் குறித்து தோனி உருக்கம்!

இத்தனை சர்ச்சைகளுக்கும் இடையே மவுனம் காத்து வந்த தோனி, தற்போது உலகக்கோப்பை ரன்-அவுட் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய முதல் போட்டியில் ரன்-அவுட் ஆனது போல், இந்தப் போட்டியிலும் ரன் அவுட் ஆனதாக கூறியுள்ளார்.

தான் ஏன் அந்த இரண்டு இன்ச் இடைவெளியை டைவ் அடித்து எட்டியிருக்கக் கூடாது என்ற கேள்வியை தொடர்ந்து தனக்குள்ளே கேட்டுக்கொண்டிருப்பதாகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.

தோனியின் இந்த உருக்கமான பதிவு அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஒருபுறம் அவர் ஓய்வு குறித்த சர்ச்சைகள் உலாவந்தாலும், இந்திய அணியின் கூல் நாயகனின் வருகைக்காக காத்திருக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.

இந்நிலையில், ரன்-அவுட் குறித்து தோனி பேசியுள்ளது அவரது ரசிகர்களை மேலும் கவலையுறச் செய்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் இது தொடர்பான பதிவுகள் வைரலாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories