விளையாட்டு

தோனி எங்களுக்கு கற்றுக்கொடுத்த அந்த ஒரு பாடம் - பிராவோ நெகிழ்ச்சி!

அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலககோப்பையில்தோனி நிச்சயம் பங்கேற்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ட்வெய்ன் பிராவோ தெரிவித்துள்ளார்.

தோனி எங்களுக்கு கற்றுக்கொடுத்த அந்த ஒரு பாடம் - பிராவோ நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை பிறகான போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார்.

உலககோப்பைக்கு பிறகு 2 மாதகாலம் இந்திய இராணுவத்தில் தோனி பயிற்சி பெற்றார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரிலும் தோனி பங்குபெறவில்லை. தற்போது நடைபெறுகின்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இடம்பெறவில்லை.

மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து ஜனவரி வரை என்னிடம் கேட்காதீர்கள் என தோனி தெரிவித்து இருந்தார். இதனால் அடுத்தாண்டு அஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலககோப்பையில் தோனி பங்கேற்பாரா என்கிற கேள்வி அவரது ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலககோப்பையில் எம்.எஸ்.தோனி நிச்சயம் இடம்பெறுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ட்வெய்ன் பிராவோ தெரிவித்துள்ளார்.

தோனி எங்களுக்கு கற்றுக்கொடுத்த அந்த ஒரு பாடம் - பிராவோ நெகிழ்ச்சி!

இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிராவோ, ''தோனி இப்போது ஓய்வு பெற மாட்டார். அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலககோப்பையில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்.

தோனி எப்போதும் கிரிக்கெட்டுக்கு வெளியில் நடக்கும் விஷயங்கள் தன்னை பாதிப்பதை விரும்ப மாட்டார். அதை எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்துள்ளார். பயப்படாமல் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே தோனி எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம்'' எனத் தெரிவித்தார்.

தோனி எங்களுக்கு கற்றுக்கொடுத்த அந்த ஒரு பாடம் - பிராவோ நெகிழ்ச்சி!

பின்னர் ஒய்வை திரும்பப் பெற்றது குறித்து எழுப்ப பட்ட கேள்விக்கு பதிலளித்த பிராவோ, ''கிரிக்கெட்டுக்கு வெளியில் நடந்த அரசியலால் ஒய்வை அறிவித்தேன். தற்போது, மேற்கிந்திய தீவுகள் அணியிலும், கிரிக்கெட் போர்டிலும் ஏற்பட்ட மாற்றங்கள் நம்பிக்கையை அளித்துள்ளது. அதனால், எனது ஒய்வு முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டேன்.

தற்போதைய மேற்கிந்திய தீவுகள் அணி திறமையான மற்றும் இளம் வீரர்களை கொண்டுள்ளது. ரசல், சுனில் நரேன் ஆகியோர் திரும்பினால் அணி மேலும் வலுவடையும். உலகளவில் பலம் வாய்ந்த அணியாக நாங்கள் மீண்டும் வலம் வருவோம்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories