விளையாட்டு

''ஜனவரி வரைக்கும் எதுவும் கேட்காதீங்க'' - தோனியின் பதிலால் அதிர்ந்து போன ரசிகர்கள்!

மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து ஜனவரி வரை என்னிடம் கேட்காதீர்கள் என இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி தெரிவித்துள்ளார்.

''ஜனவரி வரைக்கும் எதுவும் கேட்காதீங்க'' - தோனியின் பதிலால் அதிர்ந்து போன ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

அதைத்தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி 2 மாதம் ஓய்வில் இருந்தார். அப்போது இந்திய இராணுவத்தில் அவர் பயிற்சி பெற்றார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரிலும் தோனி பங்குபெறவில்லை. தற்போது அடுத்த மாதம் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இடம்பெறவில்லை.

இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தோனியின் செயல்பாட்டைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

''ஜனவரி வரைக்கும் எதுவும் கேட்காதீங்க'' - தோனியின் பதிலால் அதிர்ந்து போன ரசிகர்கள்!

இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் தோனி. அப்போது, தோனியிடம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடுப்பில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, ஜனவரி மாதம் வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வரவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து இதுவரை என்னிடம் கேட்காதீர்கள் என தோனி தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories