அரசியல்

“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!

மறைந்த தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

மறைந்த தேமுதிக நிறுவனரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74-வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 25). இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியின் தொண்டர்களும், பொதுமக்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!

இதனையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர்.

ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்!

அவர் புகழ் ஓங்கட்டும்! என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories