அரசியல்

‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!

தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி ஆளுநரின் பிரதிநிதியை சேர்க்க முயற்சிக்கும் தவெக அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டின் ஒவ்வொரு உரிமைகளையுமே ஒன்றிய பாஜக அரசிடம் போராடிப் பெற்று மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து நமது உரிமையை நிலைநாட்டியது திமுக அரசும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும்.

அதற்கான மிகப்பெரிய ஆதாரமே பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாட்டின் முதலமைச்சரே இருக்கலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்புதான்.

ஆனால், இன்றோ தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் தேடுதல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-லிருந்து 5-ஆக உயர்த்தி, அக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதியை இணைக்கும் முயற்சிக்கு வலு சேர்த்துள்ளனர் தவெக அரசும் முதலமைச்சர் விஜயும்.

‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!

இதுகுறித்து கடும் கண்டனப் பதிவை வெளியிட்டுள்ள, திமுக தகவல் தொழில்நுட்ப அணி, டெல்லியிடம் உரிமைகளை பறிகொடுக்கும் முதுகெலும்பற்ற முதல்வர்!

கடந்த தி.மு.கழக அரசு பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை முதலமைச்சரே மேற்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்ததோடு, இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்திலும் நடத்தி வந்தது.

ஆனால், தற்போதைய த.வெ.க அரசோ மாநில உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் அடி பணிந்து துணைவேந்தர் தேடல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தவும், அதில் ஒன்றிய அரசின் UGC சார்பிலான உறுப்பினரையும் சேர்க்கத் துடிக்கிறது.

முதலமைச்சருக்கு இருக்கும் அதிகாரங்களையும் மாநில உரிமையையும் அடமானம் வைத்து, நம்முடைய பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் அடமானம் வைக்கும் முதுகெலும்பில்லாத கோழைதான் விஜய் என்பதை வரலாறு நினைவில்கொள்ளும் என கடுமையாக விமர்சித்துள்ளது.

banner

Related Stories

Related Stories