அரசியல்

SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !

SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (04-11-2025)

அனைத்­துக் கட்­சி­க­ளும் எதிர்ப்பு!

“ஜனநாயக விரோத - சட்ட விரோத முயற்சிகளைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்” என்று தி.மு.க. தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. விரல் விட்டு எண்ணக் கூடிய நான்கைந்து கட்சிகள் மட்டும் வரவில்லை. அதிலும் இரண்டு கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ஏற்கவில்லை என்று அறிவித்த கட்சிகள் ஆகும்.

ஒன்றிணைந்து செயல்படுவதில் அவர்களுக்கு தயக்கம் இருக்கலாமே தவிர, தேர்தல் ஆணையத்தின் முடிவை அவர்கள் ஏற்கவில்லை. பா.ஜ.க.வும், பா.ஜ.க.வின் பழனிசாமி பிரிவும் மட்டுமே பங்கேற்காத முக்கியக் கட்சிகள். மற்றபடி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளன. கடுமையாக எதிர்க்கின்றன.

“பீகார் மாநில S.I.R. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், குறிப்பாக அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளிவராத காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளது ஏற்க இயலாது.

நமது அச்சத்துக்கு மிக முக்கியமான காரணம், பீகார் மாநிலத்தில் நடைபெற்றவை ஆகும்.

SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !

ஒன்றிய பா.ஜ.க.வின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. முறையான நடவடிக்கையைச் செய்யாமல் தேர்தல் ஆணையமே அறிவிப்பைத் தன்னிச்சையாக வெளியிடுவது, அரசியல் சட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்திற்கும் எதிரானது. இப்போது செய்யப்பட்டுள்ள S.I.R அறிவிப்பே சட்டவிரோதமாகும்” என்று அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த உணர்வோடு நிலைப்பாட்டை எடுக்கின்றன.

பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தது. பீகாரில் ஒரே தொகுதியில் 30,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றம்சாட்டினார். இதுபோன்ற சதிகளை தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிப்பார்கள்.

அரசியல் கட்சிகள் கேட்கும் கேள்விகள் மிகமிகச் சாதாரணமானவை ஆகும். ஆதார் அட்டையை 12-ஆவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 27.10.2025 அறிவிப்பில் தெளிவற்ற முறையில் ஆதார் பற்றி குறிப்பிட்டுள்ளது ஏன்? என்பதுதான் இவர்கள் எழுப்பும் கேள்வி ஆகும்.

ஆதார் அட்டையைக் கொடுப்பதே ஒன்றிய அரசுதான். ஆதார் அட்டைக்கான உச்சநீதிமன்றத்தில் பலமாக வாதிட்டதும் பா.ஜ.க. அரசுதான். இப்போது அவர்களே ஆதார் அட்டையை ஏற்க மறுத்தால் பிறகு யார் ஏற்பார்கள்? ஆதாருக்கு என்ன மரியாதை?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று தி.மு.க. இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?

ஆவணங்கள் கொடுக்க வேண்டுமா, இல்லையா என்ற தெளிவு இல்லை. இதைக் கூடத் தெளிவாகச் சொல்லாமல் எதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளும் கேட்கும் கேள்வி ஆகும்.

SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !

இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் 4 முதல் தொடங்குகின்றது. ஏற்கனவே மழை பெய்து கொண்டு இருக்கிறது. அரசு அலுவலர்கள், நிவாரணப் பணிகளில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இது போன்ற பணியைச் செய்ய முடியாது. செய்தாலும் குழப்பம்தான் ஏற்படும். தேர்தல் ஆணையத்துக்கு என்ன அவசரம் என்பதுதான் யதார்த்தமான கேள்வி ஆகும். “தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் S.I.R-ஐ நடத்த வேண்டும்” என்றுதான் இவர்கள் கோருகிறார்கள்.

பீகாரில் SIR-ல் நடைபெற்றுள்ள மோசடியை Scroll இணையப் பத்திரிகை கள ஆய்வு செய்தது. 100 பேரிடம் பேட்டி கண்டார்கள். பல ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசித்து வந்த சிலரையே ‘காணப்படவில்லை' (absent) அல்லது 'இடமாற்றம்' (shifted) என்று சொல்லப்பட்டதாக Scroll தெரிவித்திருக்கிறது.

தேர்தல் ஆணையம், “வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு” நடத்தப்படும் என்று தெளிவாகக் கூறியிருந்த போதிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் (BLOs) தங்கள் வீடுகளுக்கு வரவே இல்லை என்று வாக்காளர்கள் Scroll செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.இதுபோல் இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா?

எந்த சீர்திருத்தமும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் எதற்கு இந்த குழப்பம் என்பது தான் கேள்வி. பீகாரில் கண்ணுக்கு முன்னால் அனைத்தையும் பார்த்தோம். அதே போல் இங்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வைக்கும் குற்றச்சாட்டு எதற்கும் தேர்தல் ஆணையம் பதில் சொல்வது இல்லை. பக்கம் பக்கமாக எழுதி வந்து வாசிக்கிறார் தேர்தல் ஆணையர். ஆனால் எந்தக் கேள்விக்கும் முறையான பதில் அளிப்பது இல்லை.

என­வே­தான் அர­சி­யல் கட்­சி­கள், தேர்­தல் ஆணை­யத்தை நம்­பா­மல் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் கத­வைத் தட்­டு­வ­தற்கு முன்­வந்­துள்­ளன.

உச்­ச­நீ­தி­மன்­றம்­தான் உரிய நீதியை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும்.

banner

Related Stories

Related Stories