நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதை கண்டித்து சிறுபான்மைத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் :
வக்ஃப் சட்டதிருத்த - மசோதாவை திரும்பப் பெறக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி “இஸ்லாமியர்களின் பாதுகாவலர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்” என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :- வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கத்தோடு வாழும் நம் நாட்டில் வெறுப்புகளை பரப்பி நாள்தோறும் மக்கள் விரோத செயல்களை அரங்கேற்றிவரும் ஒன்றிய பாஜக அரசு, அதன் நீட்சியாக தற்போது சிறுபான்மை மக்கள் மீது போர் தொடுக்கும் வகையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. தேசிய அளவில் பெரும்பான்மையான கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நள்ளிரவில் நிறைவேற்றப்பட்ட தன் மூலம் பாஜகவின் சிறுபான்மையி னர் விரோத செயல்பாடுகள் வெட்டவெளிச்சமாகியிருக்கின்றன.
காஷ்மீருக்கான 370வது பிரிவு ரத்து, குடியுரிமை சட்டத்திருத்தம், பொது சிவில் சட்டம், வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் என ஒன்றிய பாஜக அரசின் சட்டங்களும், திட்டங்களும் இஸ்லாமிய மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் முயற்சியாகவே இருக்கின்றன. சிறுபான்மையினர் நலனுக்காகவே 1994ம் ஆண்டு இயற்றப்பட்ட வக்ஃபு சட்டத்தில், 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் மட்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான முன்வரைவினை கடந்தாண்டு ஆக்ஸ்ட் 3ம் தேதி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தாக்கல் செய்தது.
இந்த வக்ஃபு திருத்தச் சட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்- துக்கு விரோதமான, வக்ஃபு நோக்கத்துக்கு எதிரான பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. குறிப்பாக வக்ஃபு நிறுவனங்களின் சுயாட்சி- யைப் பாதிக்கும் வகையில், மத்திய வக்ஃபு கவுன்சில் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றும் நபர் மட்டுமே வக்ஃபு அறிவிக்க முடியும் என்ற பிரிவின் மூலம், முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்ஃபுகளைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது.

வஃக்பு வாரிய நிர்வாகத்தில் தலையீடு!
அரசியலமைப்பின் பிரிவு 26-இன் கீழ் மத சுதந்திரத்தை மீறும் வகையில், வக்ஃபு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது வக்ஃபு வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்ற முயற்சிக்கிறது வக்ஃபு சட்டத்திருத்தம். இதேபோன்று சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளே சட்டத்திருத்ததில் இடம்பெற்றிருக்கின்றன.
வக்ஃபு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால் தொடக்கத்தில் இருந்தே இதை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. வக்ஃபு சட்டத் திருத்தம் கடந்தாண்டு நாடாளு- மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே முதல் ஆளாய் எதிர்த்தது நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி தான். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா ஆகியோர் கடுமையாக கருத்துக்களை முன்வைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தில் இதன் மீதான விவாத்தில் கழகத் தலைவரின் போர் முழக்கங்களாக திமுக உறுப்பினர்கள் முழங்கினர்.
அதுமட்டுமல்லாமல், இஸ்லாமியர்களின்பாதுகாவலனாக திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு,ஆ.ராசா.எம்.எம்.அப்துல்லா கடுமையான கருத்துகளை முன் வைத்தனர்!
வக்ஃபு சட்டத் திருத்த முன்வடி வினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள முதலமைச்சர் தளபதி அவர்கள், வக்ஃபு சட்டத் திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார். ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.
வேறு எந்த மாநில அரசுகளும் செய்யாததை, இஸ்லாமியர்களுக்காக தமிழ்நாடு அரசு செய்திருப்பதன் மூலம் சிறுபான்மையினர்களின் பாதுகாப்பு அரண், திராவிட முன்னேற்றக்கழகம் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறார் கழகத் தலைவர் தளபதி அவர்கள்.

நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு கண்டனம்!
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரே குரலில் இந்த சட்ட முன்வடிவினை எதிர்த்து குரல் எழுப்பியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும்பான்மையான கட்சிகள் பா.ஜ.க. அரசிற்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இருப்பினும், சர்வதாதிகார போக்குடன் செயல்பட்டு வருகிறது பாஜக அரசு. ஒன்றிய அரசு சிறு- பான்மையினர் மீது எத்தகைய தாக்குதல் நடத்தினாலும், இஸ்லாமியர்களின் நலன் காக்க நம்முடைய திராவிட மாடல் நாயகர் தளபதி தலைமையிலான அரசு போராடும்.
சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் போராட்டம் நடத்திவரும் முதலமைச்சர் தளபதி அவர்கள், நீதிமன்றம் செல்லப்போவதாகவும் குளுரைத்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை சட்மன்றத்திலேயே அறிவித்திருக்கிறார்.
சிறுபான்மையினர் நலன்களுக்காக திராவிட முன்னேற்றக்கழகம் நடத்தும் போராட்டங்களும், செய்துரும் நலத்திட்டங்களும் திமுக விற்கும் - இஸ்லாமியர்களுக்குமான நீண்டகால பந்தத்தை உணர்த்தும். இஸ்லாமிய மக்களுடைய உரிமைக்காக மட்டுமில்லை, கல்வி - சமூக - பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக ஆட்சிக்கு வந்த போது மிலாது நபிக்கு விடுமுறை தந்தவர்தான் முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்கள்.
•உருது பேசுகின்ற முஸ்லிம் மக்களை பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலில் சேர்த்தது,
•வக்ஃப் வாரிய சொத்துக்களை பராமரிக்க முதல்முதலில் மானியம் தந்தது,
• தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
• உருது அகாடமியை தொடங்கியது,
• கண்ணியமிகு காயிதே மில்லத் நினைவாக மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கியது,
•காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியதோடு காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் அளித்தது,
•பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை கொடுத்தது என கலைஞர் அவர்கள் தனது ஆட்சி காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு திட்டங்கள்!
அதேபோன்று இந்த 4 ஆண்டு கால திராவிட மாடல் அரசு ஆட்சியில் நம்முடைய முதலமைச்சர் தளபதி அவர்களும் எண்ணற்ற திட்டங்களை இஸ்லாமிய மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்.
•65 கோடியில் சென்னையில், “தமிழ்நாடு ஹஜ் இல்லம்” கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் அவர்கள்.
•தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
•ஹஜ் பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஹஜ் மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.
•கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து 11 ஆயிரத்து 364 ஹஜ் பயனாளிகள் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்காக 24 கோடியே 56 இலட்சம் ரூபாயை மானியமாக அரசு வழங்கியிருக்கிறது.
•தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 31 ஆயிரத்து 625 பயனாளிகளுக்கு 207 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
•சிறுபான்மையின மக்கள் பயன் பெற பல்வேறு நலத் திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 405 கோடி ரூபாய் அளவில் அரசு நிதி தரப்பட்டிருக்கிறது.
•சிறுபான்மையின கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க 76 ஆயிரத்து 663 மாணவியருக்கு 4 கோடியே 32 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
•ஒன்றிய அரசு, சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டது. எனவே, மாநில அரசு, இந்த ஆண்டு, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கியிருக்கிறது. வக்பு வாரியம் மூலம் வழங்க 12 கோடியே 17 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ் 1 இலட்சத்து ஆயிரத்து 159 மாணவிகள் பயன் பெறுவார்கள்.
•தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைக்கும் பணிகளுக்கு இதுவரை 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 தர்காக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
•கடந்த நான்கு ஆண்டுகளில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு அர-சின் நிதி உதவியாக 15 கோடியே 47 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
• தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு ஆண்டுதோறும் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் என இதுவரை ரூபாய் 10 கோடியே 22 லட்சம் நிர்வாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
• நாகூர் தர்க்கா பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிக்காக ரூ .2 கோடி நிதி வழங்கப்பட்டது.
• நாகூர் சந்தனகூடு நிகழ்ச்சிக்கு இதுவரை 130 கிலோ சந்தன கட்டைகள் வழங்கப்பட்டுள்ளது,
• வக்பு நிறுவனங்களுக்கு பெருமராமத்து மானியமாக ரூபாய் 33 கோடி வழங்கப்பட்டுள்ளது,
• 64 லட்சம் மதிப்பில் 4 மண்டல அலுவலகங்கள் (ராம் நாடு, சேலம், கடலூர், வேலூர்)
• ரூபாய் 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் வக்ஃபு சொத்துக்களை மின்னணு மயமாக்க பட்டுள்ளது,
• 60 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் உலாமாக்களுக்கு பென்சன் வழங்கப்பட்டுள்ளது,
• மாவட்ட ஹாஜிகளுக்கு மானியம் தலா 20,000 என இதுவரை ரூபாய் 3 கோடியே 12 லட்சம் வழங்கப்பட்டுள்ளது,
இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சி, இட ஒதுக்கீடு மூலமாக அவர்களுக்கான சமூகநீதி எல்லாம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் இன்றைக்கு இந்த ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமியர்களின் நலன்களுக்கான திட்டங்களை அறிவிப்பதிலும், அவர்களின் உரிமைகளைப் காப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னோடியாக இருக்கிறது என்பதை உரக்கச் சொல்வதில் எப்போதும் எனக்கு பெருமை உண்டு.
பா.ஜ.க. வின் சதித் திட்டங்களை ஒரு போதும் தி.மு.க. அனுமதிக்காது!
இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் ஆபத்து வந்தால், ஆட்சியில் இருந்தாலும் - இல்லை என்றாலும், அதை எதிர்க்கும் நிலையில் இருக்கும் கட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகம். அதனால், பாஜக அரசின் சதித்திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. அதற்கான போராட்டத்தைத் கழகத் தலைவர் அறிவித்திருக்கிறார்.
இஸ்லாமியர்களுக்கான முதல்வரின் பிரகடனம்!
வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்- துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
சட்டமன்றம் - நீதிமன்றம் - மக்கள் மன்றம் என அனைத்து தளங்களிலும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தின் பாதகங்களை எடுத்துச் செல்வோம், பாசிஸ்ட்டுகளின் சூழ்ச்சியை முறியடிப்போம் என தலைவருடைய வழியில் இளவலும், துணை முதலமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினும் கர்ஜித்திருக்கிறார்.
இஸ்லாமியர்களுக்காக முதல்வர் - கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு போராடும்! வெல்லும்!








