இந்தியாவில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அரசியலில் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
ஆளும் பாஜகவின் வண்டவாளங்களை எதிர்க்கட்சிகள் தோலுரித்து வருகின்றனர். மேலும் ஆளும் பாஜக அரசின் ஊழல்களும் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது.
இந்த நிலையில், நாடே எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் இன்று வந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதுமுள்ள 543 தொகுதிகளுக்கும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில்,
* முதற்கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 19
* 2-ம் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 26
* 3-ம் கட்ட வாக்குப்பதிவு - மே 7
* 4-ம் கட்ட வாக்குப்பதிவு - மே 13
* 5-ம் கட்ட வாக்குப்பதிவு - மே 20
* 6-ம் கட்ட வாக்குப்பதிவு - மே 25
* 7-ம் கட்ட வாக்குப்பதிவு - ஜூன் 1
மேலும் இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.