அரசியல்

தேர்தலுக்கு முன்பே பதவி... படுதோல்வியடைந்த பாஜக அமைச்சர் - ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் அசத்தல் !

ராஜஸ்தானின் கரன்பூர் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி.

தேர்தலுக்கு முன்பே பதவி... படுதோல்வியடைந்த பாஜக அமைச்சர் - ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் அசத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெவ்வேறு தேதிகளில் நடைபெற்றது. அதன்படி 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு மட்டும் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 115 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பிடித்து பாஜக ஆட்சியமைத்தது. தொடர்ந்து முதலமைச்சராக முதல் முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற பஜன்லால் ஷர்மா பதவியேற்றார். இந்த சூழலில் 200 தொகுதிகளில் மீதமுள்ள 1 தொகுதியான கரன்பூர் (Karanpur) தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் காலமானார். இதையடுத்து இந்த தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்பே பதவி... படுதோல்வியடைந்த பாஜக அமைச்சர் - ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் அசத்தல் !

இதனிடையே தேர்தல் நடைபெறுவதற்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள் பதவியேற்றனர். அப்போது இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேந்தர் பால் சிங் (Surender Pal Singh) அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட சுரேந்தருக்கும், அம்மாநில பாஜக அரசுக்கும் காங்கிரஸ் கண்டனங்கள் குவிந்தது.

மேலும் இன்னும் 5 நாட்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதி பாஜக வேட்பாளரை அமைச்சராக பாஜக அரசு ஆக்கியதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தது. எனினும் அதனை பெரிதாக பாஜக அரசு கண்டுகொள்ளாமல் தேர்தலில் மும்முரம் காட்டியது. இந்த சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு முன்பே பதவி... படுதோல்வியடைந்த பாஜக அமைச்சர் - ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் அசத்தல் !

இதில் பாஜக வேட்பாளரும், அமைச்சராக பதவியேற்றவருமான சுரேந்தர பால் சிங் படுதோல்வியை சந்தித்துள்ளார். மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர் வெற்றி பெற்றார். சுமார் 12 ஆயிரம் வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த கரன்பூர் தொகுதியில் கடந்த 6 முறை நடைபெற்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி வென்றது.

இந்த நிலையில், தற்போது தொடர்ந்து 2-வது முறையாக இந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ள ருபிந்தர் சிங், அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அண்மையில் காலமான காங்கிரஸ் வேட்பாளருமான குர்மீத் சிங் கூனரின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories