இந்தியா

“பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட குஜராத் அரசு”- பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் இன்னும் 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

“பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட குஜராத் அரசு”- பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகன்களையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்ததது.

பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தது. ஆனால் விடுதலையான குற்றவாளிகளை இனிப்புகள் கொடுத்து பாஜகவை சேர்ந்தவர்களும், இந்துத்வ கும்பலும் வரவேற்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு கண்கலங்கி பேட்டி ஒன்றையும் அளித்தார்.

தொடர்ந்து 11 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் மனுதாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "இன்று பில்கிஸ் பானு, நாளை யார்? அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதனை நீங்கள் காட்டாவிட்டால் நாங்கள் முடிவெடுக்கவேண்டியிருக்கும்" என்று காட்டமாக கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியது.

“பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட குஜராத் அரசு”- பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

மேலும் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொள்கை அடைப்படையில் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை மட்டும் விடுவித்தது எப்படி? மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகளில் விடுவித்த போது அதே அடிப்படையில் மற்ற கைதிகளை விடுவிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (08.01.2024) 11 பேரின் விடுதலையையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பின்வருமாறு :

* பில்கிஸ் பானு வழக்கின் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் 11 குற்றவாளிகளை விடுவிப்பதற்கான அதிகாரம் குஜராத் அரசுக்கு கிடையாது.

* பல உண்மைகளை மறைத்து மோசடி மூலம் நீதிமன்றத்தில் விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

* பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிப்பதை அனுமதிக்க முடியுமா? என்பது முக்கிய பிரச்னை.

* பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

“பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட குஜராத் அரசு”- பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

* குஜராத் மாநில அரசு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது. இந்த அச்சம் காரணமாகத்தான் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.

* சட்ட விதிகளை மீறுவது சமத்துவத்திற்கான உரிமைகளை மறுப்பதாகும். சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்பதாகும்.

* ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும். இறக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் எந்த பங்கும் கிடையாது.

* 14 ஆண்டுகளில் குற்றவாளிகள் பலமுறை பரோல் மூலம் வெளியே வந்து விடுமுறை பலனை அனுபதித்துள்ளனர். அவர்கள் மீண்டும் சிறை செல்வது நியாயமானது.

* சட்டத்தை பின்பற்றாமல் நீதியை நிலை நாட்ட முடியாது. நீதி என்பது குற்றவாளிகளின் உரிமைகளை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியது.

* குற்றவாளிகள் 11 பெரும் இன்னும் 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

banner

Related Stories

Related Stories