உணர்வோசை

“சூரியன் ஒரு நட்சத்திரம்” : அறிவியல் உண்மையை சொன்னதற்காக எரித்துக் கொல்லப்பட்ட விஞ்ஞானி புரூணோ!

மதவெறியர்களால் எரித்துக்கொள்ளப்பட்ட வானவியல் விஞ்ஞானி கியோர்டானோ புரூணோவின் நினைவு தினம் இன்று.

“சூரியன் ஒரு நட்சத்திரம்” : அறிவியல் உண்மையை சொன்னதற்காக எரித்துக் கொல்லப்பட்ட விஞ்ஞானி புரூணோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

சூரியன் ஒரு நட்சத்திரம்தான்; சூரியனைச் சுற்றிதான் நம் பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன என விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத 16ம் நூற்றாண்டிலேயே இதனை எடுத்துச் சென்னதற்காக மதவெறியர்களால் கொல்லப்பட்டவர்தான் ஜியார்டானோ புரூணோ (Giordano Bruno).

இத்தாலியின் நோலா நகரில் 1548ம் ஆண்டு பிறந்தவர் ஜியார்டானோ புரூணோ. தனது இளம் வயதில், மதக் கல்வி பயிலவும், கிறிஸ்தவ போதகராக பயிற்சி பெற டொமினிகனி என்ற இடத்தில் உள்ள துறவிகள் மடத்திற்கு பெற்றோரால் அனுப்பப்பட்டார். அதன்பின்னர், 1575ம் ஆண்டு தனது 24ம் வயதில் பாதிரியாராகப் பொறுப்பேற்றார் ஜியார்டானோ புரூணோ.

புரூணோ வாழ்ந்த 16ம் நூற்றாண்டு, அறிவியலின் இருண்ட காலம் என்றே அது அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், பாதிரியாராக இருந்த புரூணோ கடவுளை விட, அறிவியல்தான் உண்மை என அதிகம் நம்பினார். அதோடு மட்டுமல்லாது, கணிதத்தில் புதுப்புது தந்திரங்களை நிகழ்த்திக் காட்டினார். காலப்போக்கில் வெகுமக்கள் மத்தியில், நல்ல பேச்சாளர், இறையியலைச் சார்ந்து பேசுபவர், அறிவியலின் கலங்கரை விளக்கமாக இருந்தவர், ஐரோப்பாவின் மிகப் புத்திசாலியான மனிதர் என்று போற்றப்பட்டவர்.

“சூரியன் ஒரு நட்சத்திரம்” : அறிவியல் உண்மையை சொன்னதற்காக எரித்துக் கொல்லப்பட்ட விஞ்ஞானி புரூணோ!

அதன்பின்னர், கத்தோலிக்க கற்பித்தலில் உள்ள அறிவின் ஆதாரம் அறியும் முறை, நடைமுறையற்ற பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆராய்ந்தார். அதன்விளைவாக கொதித்தது அதிகார வர்க்கம், “மதத்துரோகம் மற்றும் கிறித்தவ திருச்சபையை எதிர்க்கிறார்; இவரின் கருத்து பைபிளுக்கு எதிரானது” என குற்றம் சூட்டியது.

அதன்பின்னர், நாடோடியாக பல நாடுகளைச் சுற்றித்திருந்த புரூணோ, தனது கருத்துக்களையும், அறிவியல் மீது இருந்த உண்மைகளை சொல்வதில் தயக்கம் காட்டியதே இல்லை. அதில், ஒன்றுதான் சூரியனை மையமாகக் கொண்டு, பூமி சுற்றுகிறது என்பதும்.!

இதுதொடர்பாக புரூணோ கூறுவது, “பிரபஞ்சம் எல்லையற்றது; முடிவற்றது. பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் சூரிய குடும்பம். அதுமட்டுமல்ல பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனால் தான் இரவுபகல் உண்டாகிறது. சூரியன் என்பது இரவு வானத்தில் தெரியும் விண்மின்போல ஒன்றுதான். சூரியன்தான் பூமிபோன்ற கோள்களின் மையம். இவையனைத்தும் சேர்ந்ததுதான் சூரிய குடும்பம்.

வானில் தெரியம் விண்மீன்களுக்கும் இதே போன்ற கோள்கள் உண்டு. சூரிய குடும்பம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு. விண்மீன்கள் பிரபஞ்ச வெளியில் விரவிக்கிடக்கின்றன விண்மீன்கள் இயற்பியல் விதிப்படி இயங்குகின்றன. விண்மீன்களுக்கு இடையே ஈதர் என்ற காற்று உள்ளது” எனத் தெரிவித்தார்.

“சூரியன் ஒரு நட்சத்திரம்” : அறிவியல் உண்மையை சொன்னதற்காக எரித்துக் கொல்லப்பட்ட விஞ்ஞானி புரூணோ!

ஏன் உலகில் புவிமையக் கொள்கையை முதன் முதலில் நேரிடையாக எதிர்த்த முதல் தத்துவ ஆவான் என்றார் ஜியார்டானோ புரூணோதான். இதனால் பல்வேறு மத எதிர்ப்பு காரணமாக புரூணோ 1585ல் கட்டாயமாக பாரிஸ் நகரிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

அதன்பின்னர், மூட நம்பிக்கையும், மத வெறியும் உச்சத்தில் இருந்த ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரம் சென்றார். அங்கு சில காலம் தனது பணிகளை மேற்கொண்ட புரூணோவை, திருத்ச்சபையை எதிர்த்து பிரச்சாரம் செய்ததாகவும், மதத்துவேஷ கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறி, 1592ம் ஆண்டு மே 22ம் நாள் கைது செய்தது அப்போது இருந்த பேரரசு.

அங்கிருந்து 1593ல் ரோமிற்கு கொண்டுவரப்பட புரூணோவுக்கு, போப் மூன்றாம் கிளமெண்டிடம், தனது தரப்பு வாதத்தைக் கூற வாய்ப்பு கிடைத்தது; ஆனால் அங்கு புரூணோவின் வாதமும், மொழித்திறமையும் எடுபடாமல் போனது. இதனால் ரோம் நகரில் 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார்.

“சூரியன் ஒரு நட்சத்திரம்” : அறிவியல் உண்மையை சொன்னதற்காக எரித்துக் கொல்லப்பட்ட விஞ்ஞானி புரூணோ!

தனது உயிருள்ளவரை தனது கருத்தில் பின்வாங்க மறுத்த புரூணோவை, மதத்துவேஷ குற்றத்துக்காக உயிருடன் எரிக்க ஆணையும் பிறந்தது . அதன்படி, 1600ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி தனியார் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்ட புரூணோ, 1600ம் ஆண்டு பிப்ரபரி 17ம் தேதி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.

பின்னர் புரூணோ கொலைசெய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்குப்பின் 1603-ல் இலண்டாம் ஜான்பால் போப்பாக பதவியேற்றபோது, புரூணோவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தார். புரூணோ உலகை விட்டுப்போன 7 ஆண்டுகளுக்குப்பின் அவருக்காக நோலாவில் சிலை வைக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, சந்திரனின் காணப்படும் கிரேட்டர்கள் பள்ளத்தாக்குகளில் ஒன்றுக்கு “கியோர்டானோ புரூணோ” என்று பெயரிடப்பட்டுள்ளது. உயிர் பிரிந்த பின், கொண்டாடப்பட்ட புருனோவின் கருத்துக்கள்தான், 20ம் நூற்றாண்டின் விஞ்ஞானிகளுக்கு வானவியல் பற்றிய விதைகளாக விளை நிலங்களாக வெளிப்பட்டன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அறிவியல் வளர்ச்சியடையும் இந்த காலத்தில் கியோர்டானோ புரூணோவை நினைவு கூறுவோம்!

banner

Related Stories

Related Stories