முரசொலி தலையங்கம்

”ஹலோ சி.எம்.சார்… உங்களது தூய ஆட்சியில் ரத்தக் குவியல்கள்.. தினந்தோறும் பதற்றம்..!” - முரசொலி விமர்சனம்!

கடந்த ஒரு வார கால தவெக ஆட்சியில் தினந்தோறும் நடக்கும் அவலத்தையும் கொலை கொள்ளை சம்பவங்களையும் பட்டியலிட்டு இதுதான் விஜயின் சர்கார் என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

”ஹலோ சி.எம்.சார்… உங்களது தூய ஆட்சியில் ரத்தக் குவியல்கள்.. தினந்தோறும் பதற்றம்..!” - முரசொலி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஹலோ சி.எம்.சார்... கடந்த ஒரு வார காலம் தமிழ்நாடு உங்களது ஆட்சிக் காலத்தில் எப்படி ஆகி இருக்கிறது தெரியுமா? உங்களது தூய ஆட்சியில் ரத்தக் குவியல்கள் எத்தனை நடந்திருக்கிறது தெரியுமா? எத்தனை குற்றச்சம்பவம் நடந்திருக்கிறது தெரியுமா?

*நாகப்பட்டினத்தில் அடுத்தடுத்து 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். நாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகே 38 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுப்பு. நாகை அரசு தலைமை மருத்துவமனை அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கண்டெடுப்பு. இருவரது உடல்களிலும் காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மக்கள் அச்சம்.

•திருத்துறைப்பூண்டியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 160 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை அமோகமாக நடந்துள்ளது. சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்பவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் பணம், 4 செல்போன், 3 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

•கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், திருட்டைப் பார்த்து சப்தம் போட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

•கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நிதி நிறுவனம் நடத்த அரசின் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்த த.வெ.க. நிர்வாகி ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

•திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர் வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.7000 லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. லஞ்சம் பெற்ற புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைதுசெய்து விசாரணை செய்தபோது அலுவலக 3வது மாடியிலிருந்து குதித்து சுரேஷ் தற்கொலை முயற்சி செய்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். அரசு ஊழியர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

•தூத்துக்குடியில் 3 நாளில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

•திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து திருத்தணி காவல்துறையினர் விசாரணை நடந்தி வருகிறார்கள்.

*சென்னை திருவொற்றியூரில் 2.5 கிலோ கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

”ஹலோ சி.எம்.சார்… உங்களது தூய ஆட்சியில் ரத்தக் குவியல்கள்.. தினந்தோறும் பதற்றம்..!” - முரசொலி விமர்சனம்!

•சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் த.வெ.க. கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

•சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

•ஆவடியில் 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஒடிசாவில் இருந்து மோட்டார் சைக்கிள் ரைடர்கள் போல் கஞ்சா கடத்தி வந்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இவர்களிடம் இருந்து 2000 வலி நிவாரண மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

*திருப்பெரும்புதூர் அருகே இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணிமங்கலம் அடுத்த அம்மணம் பாக்கம் கிராமத்தில் லோகேஷ் என்பவரின் வீட்டில் இருந்த கானா பாடகர்கள் பரத், சீனு ஆகியோரை வெட்டிப் படுகொலை செய்தார்கள். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இதனைச் செய்துள்ளது.

•திருச்சி காஜாமலை பகுதியில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கல்லால் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடூரமாகத் தாக்கிய இளைஞரை பொதுமக்கள் சுற்றிவளைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருச்சியில் காவல்துறை ஐ.ஜி. அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

•தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலி கண் முன்னே காதலனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. காதலியின் தந்தை மற்றும் உறவினர்கள் நடத்திய தாக்குதலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சஞ்சய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

•புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை 2 பேர் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள். குற்றவாளியைக் காவல்துறை கைது செய்யவில்லை. மக்கள் சாலை மறியல் செய்த பிறகு கைது செய்துள்ளார்கள்.

•கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

*திருநெல்வேலி ராமையன்பட்டி விலக்கு காவல்துறை செக் போஸ்ட் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. காவல்துறை செக் போஸ்ட் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 பேர் சரணடைந்துள்ளனர்.

•திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் மீது கொடூரத் தாக்குதல்

நடத்தப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் இதனைச் செய்துள்ளது. வீடுபுகுந்து தாக்கி இருக்கிறார்கள். தாக்கியதுடன், அவரின் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளது. செய்தியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதுதான் விஜய் சாரின் ஒருவார ‘சர்க்கார்’. தினந்தோறும் பதற்றம். பதறப் பதற பதற்றம். தூய சக்தி ஆட்சியில் குற்ற சக்திகள் பெருகிவிட்டார்கள்.

banner

Related Stories

Related Stories