
கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ-யின் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த இரண்டாம் தேதி சில கருத்துகளைப் பேசியுள்ளார். எனவே, அவருக்கு எதிராகப் புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், அரசின் சார்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களையும் நியமன ஆணைகளையும் வழங்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வரும் பத்தாம் தேதி கரூர் செல்ல உள்ளார். இதனைச் சிபிஐ கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சரின் பயணத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்போதைய அமைச்சராக இருந்துகொண்டு சாட்சிகளை அச்சுறுத்தும் வகையிலும், சிபிஐ விசாரணையைத் திசைதிருப்பும் வகையிலும் பேசுவது சட்டவிரோதமானது என்று திமுக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, ஆதவ் அர்ஜுனா மீது தனியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனுவில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.






