விளையாட்டு

‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’

ஃபிஃபா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், பராகுவே எதிர்க்கட்சி செனட்டர் செலஸ்டே அமரில்லா எம்பாப்பே மீது இனவெறி அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா?  குவியும் கண்டனங்கள்’
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாப்பே மீது நிறவெறி காட்டப்பட்டதாகவும், அவருக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், எம்பாப்பே அடித்த பெனால்டி கோலின் உதவியுடன் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டிக்குப் பிறகு பராகுவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த செனட்டர் செலஸ்டே அமரில்லா சமூக வலைதளங்களில் எம்பாப்பேவை குறிவைத்து இனவெறி மற்றும் அவதூறு கருத்துகளை பதிவிட்டார்.

அந்தப்பதிவில், ”எம்பாப்பே காலனித்துவ காலத்து நபர். அடிமை போன்ற நபர் என்று விமர்சனம் செய்தார். அதோடு அவர் பிரெஞ்சுக்காரர் போல நடிக்க முயலும் திமிர்பிடித்த, அசிங்கமான, புதுப்பணக்காரர்” என்று மிக மோசமாக சாடியிருந்தார்.

அமரில்லாவின் கருத்துகள் பராகுவே அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என பராகுவே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது கருத்துகள் மனித கண்ணியம், பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியான வாழ்வை வலியுறுத்தும் எங்கள் நாட்டின் அடிப்படை மதிப்புகளுக்கு முற்றிலும் முரணானவை. அவை அவரது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே; பராகுவே அரசையோ, மக்களையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா?  குவியும் கண்டனங்கள்’

இதற்கு பதிலளித்துள்ள எம்பாப்பே, “அவர் பொதுப் பதவியில் இருக்கத் தகுதியற்றவர். உலகக் கோப்பையில் பராகுவே வீரர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் போராட்ட மனப்பான்மையும் அவரது பொறுப்பற்ற மற்றும் இனவெறி நிறைந்த கருத்துகளால் மறைக்கப்பட்டுவிட்டது. வெறுப்பையும் இனவெறியையும் பரப்புபவர்களுக்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்” என்று கடுமையாக சாடினார்.

இந்தச் சம்பவம் குறித்து பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு (FFF), அமரில்லாவின் கருத்துகள் “மிகவும் அருவருப்பானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் குற்றத்திற்குரியவை” என்று கண்டித்ததுடன், அவருக்கு எதிராக குற்றவியல் புகார் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல் எம்பாப்பேவை மட்டுமல்ல, பிரான்ஸ் நாட்டையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் எம்பாப்பேவுக்கு ஆதரவு தெரிவித்து, “இனவெறிக்கு எதிராக கிலியன் எம்பாப்பே இன்னொரு கோல் அடித்துள்ளார். அவருக்கு எனது முழு ஆதரவு. வெறுப்பை பரப்பும் வார்த்தைகளுக்கு எங்கள் பதில் கண்ணியம், மரியாதை மற்றும் சகோதரத்துவம்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, பராகுவே நாடாளுமன்றத் தலைவர் பாசிலியோ நூன்யஸ் தெரிவிக்கையில், “அமரில்லாவின் கருத்துகள் பராகுவே மக்களின் உண்மையான மதிப்புகளை பிரதிபலிப்பதில்லை என்றும், விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

வெற்றியாலும் எங்கள் சாதனைகளாலும் மட்டுமே பதில் இருக்குமே தவிர இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிந்தையில் கூட இடமளிக்க மாட்டோம் என்பது போலத்தான் பராகுவே அணியின் செயல்பாடுகள் உள்ளது. போட்டியில் தோற்றுவிட்ட ஒரே காரணத்திற்காக மட்டுமே பிரான்ஸ் எதிர்க்கட்சி செனட்டர் செலஸ்டே அமரில்லா கூறிய கருத்து அவரின் இழி மனநிலையை காண்பித்துள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories