முரசொலி தலையங்கம்

பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை... நீதிமன்றத்தில் கொட்டு வாங்கினாலும் வெட்கம் இல்லை - முரசொலி!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 23 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில், பா.ஜ.க-வின் பழிவாங்கும் எண்ணத்திற்கு என்ன விலை கொடுக்கும் என முரசொலி விமர்சித்துள்ளது.

பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை... நீதிமன்றத்தில் கொட்டு வாங்கினாலும் வெட்கம் இல்லை - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தனது பழிவாங்கும் அரசியலுக்கு மட்டுமே பா.ஜ.க. பயன்படுத்தி வருவதை அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் வந்திருக்கும் தீர்ப்பு அம்பலப்படுத்தி இருக்கிறது.

முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். துணை முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதைப் பரப்புரை செய்தே டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது? அனைவரையும் விடுதலை செய்து விட்டது சி.பி.ஐ. நீதிமன்றம்.

மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார் மணீஷ் சிசோடியா. இவர்கள் சிறையில் இருந்ததற்கு பரிகாரம் என்ன? இவர்கள் மீது அவதூறு கிளப்பி, அவமானப்படுத்தியதை எப்படி சீர்படுத்த முடியும்?

இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது பா.ஜ.க.. அவர்களுக்கு வேண்டியது எல்லாம், குறுகிய காலப் பலன்கள். அதற்காகத்தான் சி.பி.ஐ., அமலாக்கத்துறையை பயன்படுத்துவார்கள். நீதிமன்றத்தில் கொட்டு வாங்குவதைப் பற்றி எல்லாம் பா.ஜ.க. கவலைப்படுவது இல்லை. நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் வெட்கப்படுவதும் இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போது பிணை கேட்டு உச்சநீதிமன்றம் போனார். அப்போதே உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியது.”டெல்லி கலால் கொள்கை வழக்கில் 100 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்றால் அந்தப் பணம் எங்கே? அதற்கான ஆதாரம் எங்கே?” என்று கேட்டது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறையால் ஆதாரத்தை தர முடியவில்லை. இருந்தால்தானே தருவார்கள்?

பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை... நீதிமன்றத்தில் கொட்டு வாங்கினாலும் வெட்கம் இல்லை - முரசொலி!

அமலாக்கத்துறை வழக்கறிஞரைப் பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.

”நீதிமன்ற நடைமுறைகள் ஏதுமில்லாமல் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமா? இந்த வழக்கில் இதுவரை ஏதாவது சொத்து முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்த முடியுமா? கலால் கொள்கை வழக்கில் கைதான டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மணீஷ் சிசோடியாவின் வழக்கில், எந்த இடத்தில் வருகிறார்? கெஜ்ரிவால் ஜாமீன் கோருவதற்கு பதிலாக தனது கைது மற்றும் காவலில் வைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார். எனவே அவரை கைது செய்தற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறதா? தேர்தல் நேரத்தில் எதற்காக கைது செய்தீர்கள்?"- என்று நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினார்கள்.

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கானது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதிதான் கெஜ்ரிவால் கைது செய்யப்படுகிறார். இத்தனை மாதமாக பயமுறுத்தி வந்துள்ளது பா.ஜ.க.. காங்கிரஸ் கட்சியுடன் அரவிந்த கெஜ்ரிவால் கூட்டணி அமைக்க சம்மதித்துவிட்டார், அதில் உறுதியாக இருந்து விட்டார் என்று தெரிந்ததும் கைது செய்தார்கள்.

பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை... நீதிமன்றத்தில் கொட்டு வாங்கினாலும் வெட்கம் இல்லை - முரசொலி!

"2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக அமலாக்கத்துறை சொல்லி வருகிறது. ஆனால் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு 2024 மார்ச் 16 ஆம் தேதி வெளியானது. உடனே மார்ச் 21 ஆம் தேதி கைது செய்கிறார்கள்"என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி சொன்னார். அரசியல்

நோக்கத்துக்காக மட்டுமே இக்கைது நடவடிக்கைகள் இருந்தன.

பா.ஜ.க.வின் கயமை முகத்திரையை கிழித்துள்ளது சி.பி.ஐ. நீதிமன்றம். டெல்லி மதுபானக் கைது வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்துள்ளது சி.பி.ஐ. நீதிமன்றம்.

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங் அளித்துள்ள 598 பக்க தீர்ப்பில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையையே ஏற்க மறுப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

“இந்த விவகாரத்தில் குற்றவியல் சதி அல்லது நோக்கம் நிரூபிக்கப்படவில்லை. எந்தவொரு நேரடிப்பணப் பரிமாற்றமோ அல்லது சதித்திட்டமோ நிரூபிக்கப்படவில்லை. பொது ஊழியர்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் தேவை. ஆவணங்கள், சாட்சிகளை நம்பாமல் ஊகங்களை சி.பி.ஐ. நம்பி இருக்கிறது”என்று நீதிபதி சொல்லி இருக்கிறார். ஒரு ஆதாரத்தைக் கூடத் தரவில்லை என்று சொல்லி இருக்கிறார் நீதிபதி.

சி.பி.ஐ.யை கடுமையாக கண்டித்துள்ளது நீதிமன்றம்.“சி.பி.ஐ. தனது ஓட்டைகளை மறைக்க அப்ரூபவர்களை மட்டுமே நம்பியது கவலை அளிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரிக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை... நீதிமன்றத்தில் கொட்டு வாங்கினாலும் வெட்கம் இல்லை - முரசொலி!

"ஆம் ஆத்மி கட்சியை முடக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீட்டிய தந்திர வியூகமே இந்த மதுபானக் கொள்ளை வழக்கு”என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லி இருக்கிறார். அதனை உறுதி செய்யும் வகையில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.

“எந்த ஆதாரமும் இல்லை என்றால் முன்பு குற்றச்சாட்டு பதிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது ஏன்?” என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தையே மிரட்டி

இருக்கிறார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் வைத்து கொடுத்த பேட்டியில் இப்படிச் சொல்லி

இருக்கிறார். இவர்கள் நீதிமன்றத்தையே வெளிப்படையாக மிரட்டுகிறார்கள்.

பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி அது மட்டும்தான்.

banner

Related Stories

Related Stories