தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா.. பாதியிலேயே நின்ற அரசுப் பேருந்து ? லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து செல்லும் அவலம்!

மீண்டும் மீண்டுமா.. பாதியிலேயே நின்ற அரசுப் பேருந்து ? லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து செல்லும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தவெக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு அரசு சார்ந்த விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதையே வழக்கமாக வைத்துள்ளது. அதோடு புதிய திட்டங்கள் எதுவும் தீட்டாமல் கடந்த திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே வாடிக்கையாக வைத்து வருகிறது.

அந்த வகையில் விடியல் பயணத்தை 'வெற்றி பயணம்' என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் அமலுலக்கு வந்ததில் இருந்தே பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் நடத்துநர் மரியாதையாக நடந்துகொள்ளவில்லை என்றும், பெண்களுக்கு டிக்கெட் விநியோகம் செய்யாமல் இருப்பதாகவும், பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிற்காமல் செல்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

அதோடு பல பகுதிகளில் புதிய பேருந்துகள் பாதியிலேயே பழுதடைந்து நிற்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவியரோடு, வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என பலரும் பாதிப்படைகின்றனர். எனினும் இந்த பிரச்சினையை போக்குவரத்து துறை சரிசெய்யாமல் அலட்சியம் கட்டி வருகிறது.

மீண்டும் மீண்டுமா.. பாதியிலேயே நின்ற அரசுப் பேருந்து ? லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து செல்லும் அவலம்!

அந்த வகையில் காஞ்சிபுரத்தில் இருந்து பனப்பாக்கம் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்து ஒன்று பொலேரோ லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி பலர் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதாவது மகளிர் கட்டணமில்லா பேருந்து வழியிலேயே நின்றதாக கூறப்படுகிறது. என்னெவென்று சோதித்தபோது அதில் என்ன பிரச்சினை என்று கண்டறியப்படவில்லை. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களை பாதியிலேயே இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பாதியிலேயே நின்ற பேருந்தை பொலேரோ லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அண்மைய காலமாக அரசு பேருந்துகள் பாதியிலேயே நிற்பதும், அதனை பயணிகள் தள்ளிக்கொண்டு செல்வதும் போன்ற வீடியோக்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. இப்படியான சூழலில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு அரசின் அலட்சியத்தையே பிரதிபலிப்பதாக உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories