தமிழ்நாடு

வெளியானது 2027-ஆம் ஆண்டு அரசு விடுமுறைப் பட்டியல்.. இத்தனையும் சனி, ஞாயிறா? : முழுப் பட்டியல் உள்ளே!

2027-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

வெளியானது 2027-ஆம் ஆண்டு அரசு விடுமுறைப் பட்டியல்.. இத்தனையும் சனி, ஞாயிறா? : முழுப் பட்டியல் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஆண்டுதோறும், நடப்பு ஆண்டு முடியும் தருவாயில் அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும். பொது விடுமுறைகள், பண்டிகை நாட்கள் போன்றவை இதில் இடம்பெறும்.

அதன்படி, 2027-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 23 அரசு பொது விடுமுறை தினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. 6 சனிக்கிழைமகள், 2 ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்கள் பட்டியலில் உள்ளது.

அரசு வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களின் பட்டியலின் படி,

2027-ஆம் ஆண்டு

1. ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு - வெள்ளிக் கிழமை

2. ஜனவரி 15 - பொங்கல் - வெள்ளிக் கிழமை

3. ஜனவரி 16 - திருவள்ளுவர் நாள் - சனிக் கிழமை

4. ஜனவரி 17 - உழவர் திருநாள் - ஞாயிற்றுக் கிழமை

5. ஜனவரி 22 - தைப்பூசம் - வெள்ளிக் கிழமை

6. ஜனவரி 26 - குடியரசு நாள் - செவ்வாய்க் கிழமை

7. மார்ச் 10 - ரம்ஜான் - புதன் கிழமை

8. மார்ச் 26 - புனித வெள்ளி - வெள்ளிக் கிழமை

9. ஏப்ரல் 01 - 'வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) - வியாழக் கிழமை

10. ஏப்ரல் 7 - தெலுங்கு வருடப் பிறப்பு - புதன் கிழமை

11. ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு /டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் -

புதன் கிழமை

12. ஏப்ரல் 19 - மகாவீரர் ஜெயந்தி - திங்கட் கிழமை

13. மே 1 - தொழிலாளர்கள் தினம் - சனிக் கிழமை

14. மே 17 - பக்ரீத் (Idul Zuha) - திங்கட் கிழமை

15. ஜூன் 15 - மொகரம் (Yaom-E-Shahadath) - செவ்வாய்க் கிழமை

16. ஆகஸ்ட் 15 - சுதந்திர நாள் - ஞாயிற்றுக்கிழமை

17. ஆகஸ்ட் 15 - மிலாதுன் நபி (Prophet's Birthday) - ஞாயிற்றுக் கிழமை

18. ஆகஸ்ட் 15 - கிருஷ்ண ஜெயந்தி - புதன் கிழமை

19. செப்டம்பர் 4 - விநாயகர் சதுர்த்தி - சனிக் கிழமை

20. அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி - சனிக் கிழமை

21. அக்டோபர் 8 - ஆயுத பூஜை - வெள்ளிக் கிழமை

22. அக்டோபர் 9 - விஜயதசமி - சனிக் கிழமை

23. அக்டோபர் 28 - தீபாவளி - வியாழக் கிழமை

24. டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் - சனிக் கிழமை

இதில் 23 நாட்கள் பொது விடுமுறையாகவும், ஏப்ரல் 1 ஒரு நாள் மட்டும் 'வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு என்பதால் (வணிக வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) விடுமுறை அளிக்கப்படும்.

2027-ஆம் ஆண்டில் 23 அரசு பொது விடுமுறைகளில் 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகும். இதில், பொங்கல் தொடர் விடுமுறையில் 2 நாட்கள், மே தினம், விநாயகர் சதுர்த்தி, விஜய தசமி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவை சனி, ஞாயிறு விடுமுறைகளாக அமைந்துள்ளன.

banner

Related Stories

Related Stories