தமிழ்நாடு

பழக்க தோஷத்தில் இந்த திட்டத்தையும்... : த.வெ.க அரசுக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!

பழக்க தோஷத்தில் இந்த திட்டத்தையும்... : த.வெ.க அரசுக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாமன்னர் முதலாம் இராசராசச் சோழனின் பிறந்தநாளைக் குறிக்கும் சதய விழா, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜ ராஜ சோழனின் 1,041வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவின் ஒரு பகுதியாகப் பெரிய கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவை சிறப்பாக நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க! என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திராவிட மாடல் ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்!

பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம்.

இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!

banner

Related Stories

Related Stories