
சென்னை துணை மேயர் மகேஷ் குமார் இன்று (அக்.21) அளித்த பேட்டியில், திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற உடன் மிகப்பெரிய மழை பெய்தது. அப்போது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அவர் மேயராக இருந்த போது கட்டமையக்கப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் தான் உள்ளது என்பதையும், அதன் பின் அமைந்த அரசு மேகொள்ளவில்லை என்பதை ஆய்வு செய்து, ஓய்வுபெற்ற நீதிபதி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்தது அவர்களின் கருத்தின் அடிப்படையில் மழை நீர் வடிகால் பணிகளை அமைத்தார்கள்.
திமுக ஆட்சியில் மழை நீர் வெள்ளதால் பாதிக்கப்பட்டால் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு வகுப்பினையே எடுப்பார்கள் அனைத்து துறையையும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஜீன் மாதம் முதலே பணிகளை முன்னாள் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆலோசனை வழங்கி களத்தில் நிற்பார்கள்.
சென்னையில் தற்போது இரு தினங்களாக மழை பெய்துள்ளது. மேயர் பிரியா இன்று ஆய்வு செய்தார். மேயர் என்பவர் கேபினேட் ரேங்கிங் உள்ளவர். அவருடன் ஆய்விற்கு ஆணையர் செல்லவேண்டும். இல்லையென்றால் துணை ஆணையர் செல்ல வேண்டும். ஆனால், மேயர் பிரியா சென்னையில் பல இடங்களில் ஆய்வு செய்த போது செயற்பொறியாளர் தான் செல்கிறார். அதிகாரிகள் எங்கள் கருத்துகளை புறக்கணிக்கினார்கள். இதற்கான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள். அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றோம். எங்கள் கருத்துகளை தெரிவித்தோம்.
மற்ற அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மேயர் உள்ளிட்ட நாங்களும் உள்ளோம். வடபழனிக்கு சென்றேன் அங்கு அதிகாரிகளை அழைத்தால் வரவில்லை அமைச்சர் வருகிறார் செல்கிறோம் என்கிறார்கள். எங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் 1-15 வரையிலான மண்டலங்களில் பாதிக்கப்படும் பகுதிகள் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினோம். இப்போது நாங்கள் கூறுவது பொது நோக்கோடு தான் சொல்கிறோம். முகத்துவாரம் தூர்வாரவேண்டும், நிவாரண மையங்கள்,
தாழ்வான பகுதிகளில் மக்களை பாதுகாக்கவேண்டிய இடங்கள், மோட்டார் வைத்து நீரை அப்புறப்படுத்தும் பணிகள் குறித்தும் ஒவ்வொரு மண்டலத்திலும் குறிப்பிட்டு நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் சொல்லியுள்ளோம்.
மாநகராட்சி மட்டுமல்லாமல் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படவேண்டும். நாங்கள் மக்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தயாராகவுள்ளோம் அதிகாரிகள் தான் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, என தெரிவித்தார்.






