அரசியல்

தமிழ்நாடு காவல்துறையில் ‘இந்தியும் ஆங்கிலமும்’.. தவெக ஆட்சியில் தமிழுக்கே இடமில்லையா? : திமுக காட்டம்!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா? என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் ‘இந்தியும் ஆங்கிலமும்’.. தவெக ஆட்சியில் தமிழுக்கே இடமில்லையா? : திமுக காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாடு காவல்துறை கொடி நாளில் தமிழ் மறைக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் முதல் அமைச்சர் வரை பார்க்கும் இடமெல்லாம், செய்திச் சேனல்களில் தவெக அரசின் கொள்கை இருமொழிதான் அதனைத்தான் பின்பற்றுவோம் எனக்கூறிவிட்டு, இருமொழிக் கொள்கை என்பது இந்தியும் ஆங்கிலமுமாக மாற்றி விட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா?

காவல்துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள Badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா?

காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா?

அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா?

தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை.

குறிப்பு: பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது! என வினவியுள்ளது.

banner

Related Stories

Related Stories