தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கிறதா? : முதலமைச்சர் விஜய்க்கு கனிமொழி MP கேள்வி!

அண்ணனாகவும் இருக்க வேண்டாம், யாராகவும் இருக்க வேண்டாம். சீர் கொடுக்கிறேன் எனப் பெண்களை ஏமாற்றியதெல்லாம் போதும்.

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கிறதா? : முதலமைச்சர் விஜய்க்கு கனிமொழி MP கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்த த.வெ.க அரசுக்குத் தைரியம் இருக்கிறதா? என தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி ”நா.த.க. கார்த்திகா கைது செய்யப்பட்டது முழுமையான அத்துமீறல் ஆகும். காலை 5:30 மணிக்கு அவர் ஏன் கைது செய்யப்பட வேண்டும்? ஏன் அவ்வளவு அவசரம்?

எதிர்க்கட்சிப் பெண்கள் மீது சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது. சென்னை மேயர் பிரியா மீதுகூடச் சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இது குறித்துப் புகார் கொடுத்தாலும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் மாத்திரை பயன்படுத்தும் வீடியோ வெளியானது. இதில் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர்?

எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகாவைக் கைது செய்யும் நேரத்தில், அவர் உடை மாற்றக்கூட அவகாசம் கொடுக்கவில்லை.

அந்த மேடையிலேயே நானும், மாவட்டக் கழகச் செயலாளர் சேகர்பாபு அவர்களும் அப்படிப் பேசுவது நாகரிகமில்லை எனக் கண்டித்தோம். ஆனால், நாங்கள் கண்டிக்கவில்லை என உண்மைக்குப் புறம்பாகப் பொதுவெளியில் ஓர் அமைச்சர் பொய்யாகப் பேசுகிறார்.

த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விழுப்புரம் அருகே சிறுமி காணாமல் போய் 10 நாள்கள் ஆகின்றன. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சரோ, பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டு இருக்கிறார்.

எந்த ஓர் ஆணும் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அண்ணனாகவும் இருக்க வேண்டாம், யாராகவும் இருக்க வேண்டாம். சீர் கொடுக்கிறேன் எனப் பெண்களை ஏமாற்றியதெல்லாம் போதும். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories