தமிழ்நாடு

பெண்களை இழிவாகப் பேசுவதுதான் த.வெ.க அரசின் கொள்கையா? - முதலமைச்சர் விஜய்யிடம் மேயர் பிரியா கேள்வி!

பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசுவதுதான் த.வெ.க அரசின் கொள்கையா என முதலமைச்சர் விஜய்யிடம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களை இழிவாகப் பேசுவதுதான் த.வெ.க அரசின் கொள்கையா? - முதலமைச்சர் விஜய்யிடம் மேயர் பிரியா கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கடுமையாகக் கேள்விகளை எழுப்பி த.வெ.க அரசைச் சாடி வருகிறார்.

இதனால், த.வெ.கவினர் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டு இழிவான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்துப் புகார் அளித்தும் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்

இந்நிலையில், பெண்களை ஆபாசமாகவும், இழிவாகவும் பேசுவதுதான் த.வெ.க அரசின் கொள்கையா என முதல்வர் விஜய்க்கு, சென்னை மாநகர மேயர் பிரியா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா, வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், ”தான் பொது வாழ்வில் இருக்கும் ஒரே காரணத்திற்காக தன்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், இழிவாக பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா? என்றும் ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா முதலமைச்சர் அவர்களே? என்றும் வினவியுள்ளார். த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு, Virtual abusers-ஐ உருவாக்குவது நியாயமா? என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் காவல்துறையில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கொள்கை ரீதியாக எதிர்க்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? என்றும் வினவி உள்ள மேயர் பிரியா, த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா? இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா? என்றும் விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories