தமிழ்நாடு

தமிழ்நாட்டு வீராங்கனை மனிஷா ராமதாசுக்கு என் பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

“மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சாதனைகளைச் செய்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களின் வெற்றி தொடரட்டும். அன்பும், வாழ்த்தும்.”

தமிழ்நாட்டு வீராங்கனை மனிஷா ராமதாசுக்கு என் பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளால், கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் பல்வேறு விளையாட்டு வீரர்கள், தங்களது திறமைகளை உலகளவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, ஜப்பானில் நடைபெறும் 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற உந்துதலாக செயல்பட்டுள்ளார் தமிழ்நாட்டு வீராங்கனை மனிஷா.

இதனைப் பாராட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவு பின்வருமாறு,

தமிழ்நாட்டு வீராங்கனை மனிஷா ராமதாசுக்கு என் பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

“ஜப்பானில் நடைபெற்று வரும் 5th Asian Para Games-ல் பேட்மிண்டன் விளையாட்டில் Mixed Doubles SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டு வீராங்கனை தங்கை மனிஷா ராமதாசுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

அதன் விளைவாகவும் - தங்களின் விடாமுயற்சியாலும் திறமையாலும் தங்கை மனிஷா, தம்பி சிவராஜன் சோலைமலை, தங்கை கஸ்தூரி ராஜாமணி, தம்பி ஜெயான் டொரப் மதன், தங்கை சஹானா ரவி போன்ற நம் மாற்றுத்திறன் வீரர்கள் Asian Para Games இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ளனர்.

மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சாதனைகளைச் செய்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களின் வெற்றி தொடரட்டும். அன்பும், வாழ்த்தும்.”

banner

Related Stories

Related Stories